டயமண்ட் லீக் ஈட்டி எறிதலில் இரண்டாம் இடம்பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தார் ருமேஷ் தரங்க

02 Jun, 2026 | 02:28 PM
image

(நெவில் அன்தனி)

மொரோக்கோ தேசத்தின் ரபாட் வினையாட்டரங்கில் வார இறுதியில் நடைபெற்ற வண்டா டயமண்ட் லீக் தொடரில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் சாதனை வீரர் ருமேஷ் தரங்க இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

இதன் மூலம் டயமண்ட் லீக் வரலாற்றில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்த முதலாவது இலங்கை மெய்வல்லுநர் என்ற வரலாற்றுச் சாதனையை 23 வயதான ருமேஷ் தரங்க படைத்தார்.

உலகின் முதன்மை வாய்ந்த ஈட்டி எறிதல் வீரர்களுடன் போட்டியிட்ட ருமேஷ் தரங்க 85.97 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

அவர் தனது முதலாவது முயற்சியிலேயே இந்தத் தூரத்தைப் பதிவுசெய்து முதலாம் இடத்தில் இருந்தார்.

ஆனால், இரண்டு தடவைகள் உலக சம்பியன் பட்டத்தை வென்ற க்ரனடா வீரர் அண்டர்சன் பீட்டர்ஸ் தனது நான்காவது முயற்சியில் 86.06 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதலாம் இடத்தை தனதாக்கிக்கொண்டார்.

ருமேஷ் தரங்கவால் அடுத்த மூன்று முயற்சிகளில் 85.97 மீற்றரை நெருங்க முடியாமல் போனது. அவரது நான்காவதும் கடைசியுமான முயற்சி தகுதிநீக்கம் செய்யப்பட்டது.

டயமண்ட் லீக்கில் இலங்கை சார்பாக பங்குபற்றிய இரண்டாவது மெய்வல்லுநர் ருமேஷ் தரங்க ஆவார். இதற்கு முன்னர் யுப்புன் அபேகோன் பங்குபற்றியபோதிலும் அவரால் முதல் மூன்று இடங்களுக்குள் வரமுடியாமல் போனது. ருமேஷ் தரங்க மாத்திரமே இரண்டாம் இடத்தைப் பெற்று டயமண்ட் லீக்கில் முதல் 3 இடங்களுக்குள் வந்த முதலாவது இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றார்.

இப் போட்டியில் மூன்றாம் இடத்தை டிரினிடாட் மற்றும் டுபாகோ வீரர் கெஷோன் வொல்கொட் (82.52 மீற்றர்) மூன்றாம் இடத்தைப் பெற்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் ஒற்றையர் ஆடவர்...

2026-06-08 15:12:04
news-image

லண்டன் வோட்டர்லூ பாலத்தில் மகளிர் ரி20...

2026-06-08 13:38:36
news-image

மே.தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் மந்தகதி...

2026-06-06 21:29:49
news-image

மேற்கிந்திய மண்ணில் 23 வருடங்களின் பின்னர் ...

2026-06-06 21:28:16
news-image

நியூ சண்டிகாரில் நடைபெறும் அங்குரார்ப்பண டெஸ்டில்...

2026-06-06 21:23:17
news-image

தே.வி.விழா நகர்வல ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில்...

2026-06-06 17:29:28
news-image

முன்னாள் தேசிய வீரர் மற்றும் பயிற்றுநர்...

2026-06-05 20:29:40
news-image

இளம் புயல் சூரியவன்ஷி அடங்கிய இந்திய...

2026-06-05 17:37:00
news-image

பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுடனான சந்திப்பில் சங்கக்கார...

2026-06-05 17:37:00
news-image

இத்தாலி டயமண்ட் லீக்கில் ருமேஷ் தரங்க...

2026-06-05 10:17:30
news-image

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோஹ்லி...

2026-06-04 17:50:11
news-image

குவாட்ரங்கிள் கிண்ண வருடாந்த கோல்ஃப் தொடர்...

2026-06-04 20:04:15