(நெவில் அன்தனி)
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) பணிப்பாளர் சபைக் கூட்டங்களின்போது ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக நிலைமை தொடர்பாக விபரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சரினால் நிலைமாறுதல் குழு அண்மையில் நியமிக்கப்பட்டது தொடர்பாகவே ஐசிசி பணிப்பாளர் சபையில் ஆராயட்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆராய இரண்டு ஐசிசி பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடியதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விரிவான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தனது பணிப்பாளர் சபை கூட்டங்களை இந்தியாவின் அஹமதாபாத் நகரில் ஞாயிற்றுக்கிழமை (31) நிறைவு செய்தது.
இந்தக் கூட்டங்களில் நிர்வாகத்தை பலப்படுத்துதல், மகளிர் கிரிக்கெட்டை ஆதரித்தல், உலகளாவிய போட்டி கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் கிரிக்கெட் விளையாட்டில் புதியவற்றை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
1. விதிமுறைகள்
பிரதம நிறைவேற்று அதிகாரிகள் குழுவின் பல பரிந்துரைகளுக்கு ஐசிசி பணிப்பாளர் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
அவற்றில் பின்வருவன அடங்கும்.
- போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, இரண்டு அணிகளின் முன்கூட்டிய சம்மதத்துடன் டெஸ்ட் போட்டிகளில் இளஞ்சிவப்பு (பின்க்) நிறப் பந்தைப் பயன்படுத்துவதை பரீட்சார்த்த முறையில் செயல்படுத்துதல்.
- பேரொளி தொழில்நுட்பத்தை போட்டி மத்தியஸ்தர்கள் பயன்படுத்துவது மற்றும் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் தடைபடும் நேரத்தைக் குறைப்பது ஆகியன தொடர்பாக ஆய்வுகளை நடத்துதல். இதற்கான ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மெரில்போன் கிரிக்கெட் கழகத்துடன் (MCC) இணைந்து ஐசிசி நிதியுதவி வழங்கும்.
- விதிமுறைக்கு மாறான பந்துவீச்சு பாணி தொடர்பாக முறையிடுவதற்கு போட்டி மத்தியஸ்தர்கள் ஹோக்-ஐ (Hawk-eye) தரவுகளை அணுகுவதற்கு அனுமதி வழங்குதல்.
- போட்டிகளில் வழைமையான பான இடைவேளையின்போது drinks intervals) தலைமைப் பயிற்றுநர்கள் அல்லது அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் அணியினருடன் கலந்தாலோசிக்க அனுமதித்தல். ரி20 போட்டிகளில் 15 நிமிட இடைவேளையைக் கட்டாயமாக்குதல் மற்றும் ஆட்டம் மீண்டும் தொடங்கும் போது துடுப்பாட்ட வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்தல்.
- இடப்புறமாக (லெக்சைட்) வீசப்படும் வைட் பந்துகள் குறித்த பரீட்சார்த்த விதியை நிரந்தரமாக ஏற்றுக்கொள்வது.
- எஞ்சியிருக்கும் அனைத்து எம்சிசி கிரிக்கெட் விதி மாற்றங்களையும் 2026 அக்டோபர் 1ஆம் திகதி அமல்படுத்துதல்.
- கிரிக்கெட் உலக சம்பியன்ஷிப் லீக்கில் இடம்பெறும் அணிகள், ஒவ்வொரு சவால் (செலஞ்ச்) லீக் போட்டி சுழற்சியின் போதும் மற்ற லிஸ்ட் ஏ மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளில் விளையாட தகுதியுடையவர்கள் என்பதை உறுதிப்படுத்துதல்.
2. மகளிர் கிரிக்கெட்
ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ணம் 2027க்கான கால அட்டவணையை ஜூன்-ஜூலை மாதங்களில் இருந்து, 2027 பிப்ரவரி 14-28 ஆகிய திகதிகளுக்கு மாற்றுவதற்கு ஐசிசி பணிப்பாளர் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
ஐசிசி மகளிர் வளர்ந்து வரும் நாடுகள் கிண்ணம் 2026
தரவரிசை மற்றும் முந்தைய ரி20 உலகக் கிண்ண தகுதிகாண்களில் விளையாடியதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 பூரண அங்கத்துவ நாடுகள் மற்றும் 5 இணை அங்கத்துவ நாடுகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் மகளிர் வளர்ந்து வரும் நாடுகள் கிண்ண போட்டியை 2026-இல் ஐசிசி முன்னோடித் திட்டமாக நடத்தும்.
ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம் 2028 - தகுதிகாண் வழிகாட்டி
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நடத்தப்படவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம் 2028க்கான தகுதிகாண் வழிகாட்டி பரிந்துரைக்கு பணிப்பாளர் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் போட்டிகள் நடுநிலையான ஒரு நாட்டில் நடத்தப்படும்.
- 12 அணிகள் பங்கேற்கும் போட்டி
- 2026 ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், தொடரை நடத்தும் வரவேற்பு நாடு (ஏற்கனவே தகுதி பெறவில்லை எனில்) மற்றும் 2026 ஜூலை 6ஆம் திகதியன்று ஐசிசி மகளிர் ரி20 அணிகள் தரவரிசையில் அடுத்தபடியாக மிக உயர்ந்த இடங்களில் இருக்கும் அணிகள் உட்பட 10 அணிகள் நேரடியாகத் தகுதி பெறும்.
- மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு பிராந்திய தகுதிகாண் சுற்றுகளின் மூலம் தெரிவுசெய்யப்படும் 10 அணிகள் பங்கேற்கும் உலகளாவிய தகுதிகாண் சுற்று மூலம் தீர்மானிக்கப்படும். இதற்கான பிராந்திய ஒதுக்கீடுகள் ஐசிசியின் ஜூலை மாத கூட்டங்களில் உறுதி செய்யப்படும்.
3. இணை அங்கத்துவ நாடுகள்
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்துக்கான உலகளாவிய தகுதிகாண் சுற்றை (Global Qualifier) உருவாக்கும் பரிந்துரைக்கு ஐசிசி பணிப்பாளர் சபை ஒப்புதல் அளித்துள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த உலகளாவிய தகுதிகாண் சுற்றுக்கான போட்டி அமைப்பு மற்றும் வழிகாட்டித் திட்டத்தை முடிவு செய்யும் பணி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது ஐசிசியின் அடுத்த சுற்று கூட்டங்களில் சம்பந்தப்பட்ட குழுக்களிடம் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்படும்.
4. உறுப்பினர் அந்தஸ்து
உறுப்புரிமை கடப்பாடுகளை கடுமையாக மீறியதன் காரணமாக, கிரிக்கெட் கனடாவை ஐசிசி உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த ஐசிசி பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.
பங்களாதேஷ் மற்றும் இலங்கை:
பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தேர்தல் நடைமுறை உள்ளிட்ட பங்களாதேஷின் தற்போதைய சூழ்நிலை குறித்து அங்குள்ள பங்குதாரர்களுடன் கலந்துரையாட, ஐசிசி பணிப்பாளர் சபையின் இரண்டு பிரதிநிதிகளான டாக்டர் மொஹம்மத் மூசாஜி (கிரிக்கெட் சவுத் அப்ரிக்கா) மற்றும் தவெங்வா முக்குலானி (ஸிம்பாப்வே கிரிக்கெட்) ஆகியோர் பங்களாதேஷிற்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இலங்கையில், தற்போதைய முன்னேற்றங்களை மதிப்பிடுவதற்காக ஐசிசி பிரதி தவிசாளர் இம்ரான் கவாஜா மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தேவஜித் சய்கியா ஆகியோர் அங்குச் சென்று சம்பந்தப்பட்டவர்களை சந்தித்துப் பேசியுள்ளனர்.
5. தொழில்முறை கிரிக்கெட் மேற்பார்வை
தொழில்முறை (Franchise) கிரிக்கெட்டில் விரைவாக வியாபிக்கும் வளர்ச்சி குறித்து பணிப்பாளர் சபை கரிசணை வெளியிட்டது. அத்துடன் தற்போதைய கட்டமைப்பிற்குள் சர்வதேச கிரிக்கெட் கால அட்டவணையுடன் தொழில்முறை கிரிக்கெட்டை எவ்வாறு இணங்கிப் போகும் வகையில் நடத்தலாம் என்பதை மதிப்பிட ஒரு குழுவை அமைக்க தீர்மானித்துள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM