சுதந்திர ஊடக இயக்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த மே மாதம் 29ஆம் திகதி இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது, சுதந்திர ஊடக இயக்கத்தின் புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களாக கடந்த ஆண்டின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதற்கமைய, 2026/2027ஆம் ஆண்டுக்கான அமைப்பாளராக ஊடகவியலாளர் லசந்த டி சில்வாவும், செயலாளராக ஊடகவியலாளர் திலீஷா அபேசுந்தரவும், பொருளாளராக ஊடகப் பயிற்றுவிப்பாளர் ஆனந்த ஜயசேகரவும், உப செயலாளராக ஊடகவியலாளர் ஆர். ராம்குமாரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டுக்கான செயற்குழுவில் சி. தொடவத்த, ஹனா இப்ராஹிம், சுனில் ஜயசேகர, டி.எம்.ஜி. சந்திரசேகர, உதய களுபத்திரண, ஜாவேத் முனாவர், சுஜீவ செனரத், நிரஞ்சனி ரோலண்ட், ஷான் விஜேதுங்க ஆகிய ஊடகவியலாளர்களும் சமூக ஆர்வலர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
நம்பிக்கையாளர்களாக ஊடகவியலாளர் லக்ஷ்மன் குணசேகர மற்றும் சமூக ஆர்வலர் ஷாமினி போய்ல் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
“சுதந்திரம் பொறுப்புக்கூறலை முன்னிறுத்தி” என்ற தொலைநோக்குடன், சிறந்ததொரு உலகம், சமூகம் மற்றும் மனித வாழ்க்கையை இலக்காகக் கொண்டு இயங்கும் சுதந்திர ஊடக இயக்கம், கடந்த 34 வருடங்களாக பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக தனித்துவமான பங்களிப்பை வழங்கி வரும் ஒரு பரந்த சமூக இயக்கமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM