இலங்­கையின் இறை­மையில் எந்­த­ வொரு சக்­தியும் தலை­யீடு செய்யக் கூடாது என்­பதை வலி­யு­றுத்தி சிங்கள அமைப்­புக்கள் இன்று ஜெனீவாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் முன்­றலில் போராட்­டத்­தினை மேற்கொள்­ள­வுள்­ளன. 

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 36ஆவது கூட்­டத்­தொடர் நடை­பெற்று வரும் நிலை­யி­லேயே இவ்­வா­றான  போராட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 

இதே­வேளை இலங்கை முன்னாள் கடற்­படைத் தள­ப­தி­யான சரத்­வீ­ர­சே­கர நாளை மனித உரி­மைகள் பேர­வையின் உப­குழுக் கூட்­ட­மொன்றில் உரை­யாற்­ற­வுள்ளார்.

கடந்த முறை நடை­பெற்ற உப­குழுக் கூட்­ட­மொன்றில் சரத்­வீ­ர­சே­கர பங்­கு­பற்­றி­யி­ருந்­த­போது புலம்பெயர் அமைப்புக்களுடன் நேரடியாகவே முரண்பட்டமை குறிப்பிடத்தக்கது.