இலங்கையின் மூன்று தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பதிவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, அவற்றின் நிர்வாகப் பொறுப்புகள் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே வெளியிட்டுள்ளார்.
திருத்தப்பட்ட 1973ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 32 மற்றும் 33 ஆம் பிரிவுகளின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் அமைச்சர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.
இது தொடர்பான 2489/48 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கை கைப்பந்தாட்ட சங்கம் (Handball), இலங்கை கெரம் சங்கம் (Carrom), இலங்கை ஹொக்கி சங்கம் (Hockey) ஆகிய சங்கங்களின் பதிவுகள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன.
குறித்த விளையாட்டுச் சங்கங்களின் நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பணிகளை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காக, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் கடந்த மே மாதம் 19ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமைந்துள்ளது.
தற்போதுள்ள சங்கங்களின் அரசியலமைப்பைத் திருத்தும் பணிகளை நிறைவு செய்தல் மற்றும் புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் செயல்முறைகளை வெளிப்படைத்தன்மையுடன் நடத்துதல் ஆகிய பிரதான காரணங்களுக்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தேசிய விளையாட்டுச் சங்கங்களின் திருத்தப்பட்ட அரசியலமைப்பின் கீழ், வருடாந்த பொதுக்கூட்டங்கள் கூட்டப்பட்டு, தேர்தல் மூலம் புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்படும் வரை, அந்தச் சங்கங்களின் அனைத்துப் பணிகளையும் நிர்வாகம் செய்யும் முழு அதிகாரமும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேயின் கையொப்பத்துடன், கடந்த மே 19ஆம் திகதியிடப்பட்டு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM