வனாத்தவில்லு பகுதியில், பதினைந்து வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மிகிந்தலை இராணுவ முகாமில் பணியாற்றும் இந்த 40 வயது இராணுவ வீரர், விடுமுறைக்காக கடந்த 18ஆம் திகதி வனாத்தவில்லுவுக்கு வந்திருந்தார்.

அப்போது, அவரது அயல்வீட்டுச் சிறுமியொருவரை துஷ்பிரயோகித்துள்ளார். இது குறித்த கிடைத்த தகவலின் பேரிலேயே அவரை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வீரரிடம் பொலிஸார் விசாரணை நடத்திவரும் அதேவேளை, பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.