பீபா உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ள முதலாவது தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை

Published By: Vishnu

01 Jun, 2026 | 10:22 PM
image

(நெவில் அன்தனி)

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் கூட்டாக நடைபெறவுள்ள பீபா உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் விளையாடவுள்ள முதலாவது தமிழர் என்ற வரலாற்றுச் சாதனையை நிஷான் வேலுப்பிள்ளை படைத்துள்ளார்.

இந்த மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிக்கான 26 வீரர்களைக் கொண்ட அவுஸ்திரேலிய குழாத்தில் முன்கள வீரர் நிஷான் வேலுப்பிள்ளை பெயரிடப்பட்டுள்ளார்.

அவரது தந்தை சசிநாத் வேலுப்பிள்ளையின் பிற்பிடம் மலேசியா ஆனபோதிலும் அவர் இலங்கை வம்சாவளி ஆவார். அவரது தாயார் கில்லியன் வேலுப்பிள்ளை ஆங்கிலோ இந்தியர் ஆவார்.

இந்த வருட அவுஸ்திரேலியா குழாத்தில் பெயரிடப்பட்டுள்ள 26 வீரர்களின் 17 வீரர்கள் முதல் தடவையாக உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ளனர். அவர்களில் நிஷான் வேலுப்பிள்ளையும் ஒருவராவார்.

மெல்பர்ன், விக்டோரியாவில் 2001ஆம் ஆண்டு பிறந்த நிஷான் வேலுப்பிள்ளை, க்லென் எய்ரா எவ்சி, மெல்பர்ன் விக்டரி ஆகிய கழகங்களுக்காக விளையாடியுள்ளார். 

நிஷான் வேலுப்பிள்ளை, 2024ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியில் அறிமுகமானார்.

சீனாவுக்கு எதிராக அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் 83ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக களம் புகுந்த நிஷான் வேலுப்பிள்ளை அடுத்த 7ஆவது நிமிடத்தில் கோல் போட்டு அசத்தினார்.

அப் போட்டியில் அவுஸ்திரேலியா 3 - 1 என வெற்றிபெற்றிருந்தது.

தொடர்ந்து இந்தோனேசியாவுக்கு எதிரான போட்டியிலும் மிண்டும் சீனாவுக்கு எதிரான இரண்டாம் கட்டப் போட்டியிலும் நிஷான் வேலுப்பிள்ளை விளையாடி இருந்தார்.

பீபா உலகக் கிண்ணத்தில் குழு டி இல் இடம்பெறும் அவுஸ்திரேலியா தனது ஆரம்பப் போட்டியில் துருக்கியை ஜூன் 14ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.

தொடர்ந்து ஐக்கிய அமெரிக்காவை ஜூன் 20ஆம் திகதியும் பரகுவேளை ஜூன் 26ஆம் திகதியும் அவுஸ்திரேலியா எதிர்த்தாடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏ அணிகள் மும்முனை ஒருநாள் தொடர்...

2026-06-17 23:41:23
news-image

ஒஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சம்பியன்ஷிப்பிலும் அசத்தினார்...

2026-06-17 21:17:34
news-image

பீபா உலகக் கிண்ணத்தில் அதிக கோல்களுக்கான...

2026-06-17 12:09:41
news-image

அயர்லாந்துடனான போட்டியில் இங்கிலாந்துக்கு இறுக்கமான வெற்றி;...

2026-06-17 09:18:35
news-image

நிலக்ஷிகா, கௌஷினி துடுப்பாட்டத்தில் அபாரம்; இலங்கையிடமும்...

2026-06-17 03:54:20
news-image

இலங்கைக்கு 151 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-06-16 20:59:21
news-image

இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான தீர்மானம் மிக்க...

2026-06-16 18:52:01
news-image

மேற்கிந்தியத் தீவுகள் பயிற்சியக அணி 231; ...

2026-06-16 04:30:26
news-image

மாதுளனின் துல்லிய பந்துவீச்சால் சுப்பர் ஓவரில்...

2026-06-16 11:19:49
news-image

நெதர்லாந்துடனான பீபா உலகக் கிண்ணப் போட்டியை...

2026-06-15 13:10:51
news-image

இலங்கையுடனான ரி20 தொடரை 2 -...

2026-06-15 12:38:59
news-image

கியூராகாஓ அணிக்கு எதிரான உலகக் கிண்ணப்...

2026-06-15 04:56:59