கனடா, ரொறொன்ரோ நகரில் வீட்டுப் பணிப்பெண்ணின் கவனயீனத்தால் நேற்று மாலை 4 வயது குழந்தை ஒன்று காருக்குள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று பிற்பகல் வேளையில் பணிப்பெண் குறித்த குழந்தையை காருக்குள் அமர வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.

இந் நிலையில் சில நிமிடங்களுக்கு பின்னர் துப்புரவு பணிகளுக்காக அப்பகுதிக்கு வந்த பெண் காரிற்குள் இருந்து அலறல் சத்தம் கேட்டு அயலவரின் உதவியை நாடியுள்ளார்

காரினுள் குழந்தை உயிரிற்கு போராடுவதை கண்ட அயலவர்கள் கார் கண்ணாடியை உடைத்து குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.

காரினுள் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் மயக்கம் தெளியாத நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

குறித்த பரிதாபகரமான சம்பவத்திற்கு பணிப்பெண்ணின் கவனயீனமே காரணம் என ரொறொன்ரோ பொலிஸார் குறித்த பெண்;ணை கைது செய்துள்ளனர்.