நீர்கொழும்பு, சீதுவ பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் நிறுவனமொன்றில் 50 லட்சத்துக்கும் அதிகமான பெறுமதியுள்ள மடி கணினிகளையும், கைத்தொலைபேசிகளையும் கொள்ளையடித்த இருவரை நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் ஜா-எல மற்றும் அநுராதபுரத்தைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாக குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 9 மடி கணினிகளும் 259 கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.