தன வரவை நாளாந்தம் அதிகரித்துக் கொள்வதற்கான பிரத்யேக வழிபாடு..!?

01 Jun, 2026 | 02:30 PM
image

சிறிய அளவிலான குறுந்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நாளாந்தம் வருமானம் என்பது மிக மிக அவசியம். அவர்களின் முதலீடு சிறிதும் கூட நஷ்டத்தை எதிர்கொள்ளாமல் முழுமையாக லாபத்தை அள்ளி வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பர்.

  ஆனால் விவரிக்க இயலாத பல காரணங்களால் இது பெரும்பான்மையானவர்களுக்கு நடைபெறுவதில்லை. அவர்களின் அன்றைய உழைப்பு வீணாவது தான் மிச்சம். சிலருக்கு குறைவான லாபமும், பலருக்கு குறைவான நஷ்டமும்,  சிலருக்கு அதீத நஷ்டமும் ஏற்படுவதை நடைமுறையில் காண்கிறோம்.

இந்நிலையில் இதுபோன்ற வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பிரத்யேக வழிபாட்டை மேற்கொண்டால்.. அவர்களுக்குரிய தன வரவு நாளாந்தம் தங்கு தடையின்றி வரும் என ஆன்மீக முன்னோர்கள் உறுதியாக கூறியுள்ளனர்.

நீங்கள் உங்களுடைய பிறந்த கிழமையில்... உங்களுடைய ஜென்ம நட்சத்திரத்திற்கு அடுத்து உள்ள நட்சத்திரத்தின் அதி தேவதையை... தெய்வத்தை ... பிறந்த கிழமைக்குரிய பிரத்யேக வண்ணம் கொண்ட மலரை மாலையாக சாற்றி வழிபட்டால்... தன வருவாய் தங்கு தடை இன்றி கிடைக்கும்.‌

உதாரணத்திற்கு நீங்கள் சதயம் நட்சத்திரத்தில்.. செவ்வாய்க்கிழமை அன்று பிறந்திருந்தால்.. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அன்று அந்த கிழமைக்குரிய செவ்வரளி மலர்களை வாங்கி, மாலையாக தயாரித்து, அதனை சதயம் நட்சத்திரத்திற்கு அடுத்து வரும் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் அதி தேவதையான குபேரனை செவ்வரளி மலர்களை சாற்றி வழிபட்டால்... தன வரவு அதிகரிக்கும்.  

சிலர் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு அதி தேவதை என 'ஏக பாதர்' எனும் சிவபெருமானை குறிப்பிடுவார்கள். அவருக்கும் நீங்கள் செவ்வரளி மலரை சாற்றி வழிபட்டால் தன வரவு அதிகரிக்கும். இதனை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் மறவாமல் செய்து வந்தாலும் அல்லது ஒவ்வொரு பூரட்டாதி நட்சத்திர தினத்தன்று செய்து வந்தாலும்... தன வரவு அதிகரிப்பதை அனுபவத்தில் காணலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாஸ்து தோஷமற்ற காலி காணி வாங்குவதற்கான...

2026-07-18 16:01:41
news-image

ஆடி மாதம் என்ன செய்யலாம்?

2026-07-17 16:06:56
news-image

தனவந்தராக வளர்வதற்குரிய சூட்சம குறிப்பு..!

2026-07-16 17:17:34
news-image

வாராகி அம்மனின் அருள் கிடைப்பதற்கான விசேட...

2026-07-15 15:02:03
news-image

கணவன் - மனைவி இடையேயான கருத்து...

2026-07-14 17:26:25
news-image

தொழிலில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக வழிபாடு!

2026-07-13 17:20:07
news-image

கர்மா தொடர்பான கெடுபலன் குறைவதற்கான எளிய...

2026-07-11 16:58:36
news-image

தடையற்ற வருவாய் கிடைப்பதற்கான எளிய வழிமுறை..!

2026-07-10 15:21:24
news-image

நினைத்ததை சாதிக்கும் வல்லமை வழங்கும் சூட்சம...

2026-07-09 18:36:55
news-image

அரசாங்க பணி கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

2026-07-08 14:58:00
news-image

வாராகி அம்மனுக்குரிய பிரத்யேக தீப வழிபாடு

2026-07-07 17:13:45
news-image

தொழிலில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!

2026-07-06 15:19:29