கொழும்பு தமிழ்ச் சங்கத்தினால் மூன்று நாள் வைபவமாக ஏற்பாடு செய்யப்பட்ட "ஈழமும் மணிமேகலையும் 2026" இலக்கிய மாநாட்டின் முதல் நாள் நிகழ்வுகள் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (29) மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.
முதல் நாள் பேராசிரியர் ஆ.சதாசிவம் அரங்கு நிகழ்வுகளை தொழிலதிபர் ந.முருகேசன் - பிரேமா முருகேசன் தம்பதி மங்கல விளக்கேற்றி ஆரம்பித்துவைத்தனர்.
கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சங்கத்தின் நிதிச் செயலாளர் ம.பிரசாந்தன் தொடக்கவுரையும் இலக்கியக் குழுச் செயலாளர் தெ.மதுசூதனன் நோக்குரையும் ஆற்றினர்.
இதன்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலரின் முதல் பிரதியை, தொழிலதிபர் ந.முருகேசன் - பிரேமா முருகேசன் தம்பதியர் பெற்றுக்கொண்டனர்.
அத்துடன் அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் இயக்குநர் திவ்யா சுஜேனின் நடன அமைப்பில் உருவான “மணிபல்லவம்” நாட்டியப் படைப்பு இதன்போது நிகழ்த்தப்பட்டது.
படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்


































கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM