பிரான்ஸ் நீதியமைச்சர் பதவி விலகல்

Published By: Raam

28 Jan, 2016 | 09:50 AM
image

பிரான்ஸில் அந்­நாட்டு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தீவி­ர­வாத குற்­றச்­சாட்­டுக்­குள்­ளா­ன­வர்­களின் பிர­ஜா­வு­ரி­மையை இரத்துச் செய்­வது தொடர்­பான திட்டம் குறித்து விவா­தத்தில் ஈடு­ப­டு­வ­தற்கு சிறிது முன்னர் அந்­நாட்டு நீதி அமைச்சர் கிறிஸ்­ரியன் தோபிரா பதவி வில­கி­யுள்ளார்.

அவ­ரது பதவி வில­கலை பிரான்ஸ் ஜனா­தி­பதி பிரான்­கொயிஸ் ஹொலண்ட் ஏற்றுக் கொண்­டுள்­ள­தாக எலிஸி மாளிகை தெரி­வித்­தது.

மேற்­படி சர்ச்­சைக்­கு­ரிய பிரே­ரணை தொடர்பில் கிறிஸ்­ரியன் தோபிரா கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த வருடம் நவம்பர் 13 ஆம் திகதி பாரிஸில் 130 பேர் பலி­யா­வ­தற்கு கார­ண­மான தீவி­ர­வாதத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து தீவி­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்­களின் பிர­ஜா­வு­ரி­மையை நீக்கும் திட்டம் முன்­வைக்­கப்­பட்­டது.

பிரான்ஸின் சிரேஷ்ட கறுப்­பின அர­சி­யல்­வா­திகள் சிலரில் ஒரு­வ­ரா­க­வுள்ள கிறிஸ்­ரியன் தோபி­ராவின் இடத்­திற்கு அந்தத் திட்­டத்தின் ஆத­ர­வா­ள­ரான ஜீன் ஜக்­குயஸ் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

பிரெஞ் கயா­னாவில் பிறந்த கிறிஸ்­ரியன் தோபிரா நீதி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் இன ரீதியான இகழ்ச்சி விமர்சனங்களால் துன்பப்பட நேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52