மாகாண சபைத் தேர்தல் விட­யத்தில் பெரும் குழப்­பத்தில் அர­சாங்கம்

31 May, 2026 | 12:51 PM
image

"மாகாண சபைத் தேர்­தலை அர­சாங்கம் இந்த ஆண்­டுக்குள் நடத்த வேண்டும், தேர்­தலை நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் எடுக்கும் தீர்­மா­னங்­க­ளுக்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்­குவோம்” என்று எதிர்க்­கட்­சிகள் ஒன்­றி­ணைந்து உறுதி வழங்­கி­யுள்­ளன.

பழைய தேர்தல் முறை­மையின் கீழ் மாகாண சபைத் தேர்­தலை நடத்த வேண்டும். இந்தத் தேர்­தலில் வேட்பு மனுத் தாக்­கலின் போது பெண்கள் மற்றும் இளைஞர் பிர­தி­நி­தித்­து­வத்­துக்கு சுய­வி­ருப்­பத்தின் அடிப்­ப­டையில் 25 வீத பிர­தி­நி­தித்­துவ ஒதுக்­கீட்டை வழங்­கு­வ­தற்கு தாம் தயார் என்றும் எதிர்க்­கட்­சிகள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.

எதிர்க்­கட்­சி­களின் பிர­தி­நி­திகள் ஒன்­றி­ணைந்து கடந்த புதன்­கி­ழமை கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்டில் பல்­வேறு கட்­சி­களின் தலை­வர்கள் பங்­கேற்­றி­ருந்­தனர். இதன்­போதே பழைய முறை­மையின் அடிப்­ப­டையில் மாகாண சபைத் தேர்­தலை நடத்த வேண்­டி­யதன் அவ­சியம் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

இங்கு கருத்து தெரி­வித்­தி­ருந்த இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் செய­லாளர் எம்.ஏ. சுமந்­திரன், மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாணக்­கியன் இரா­ச­மா­ணிக்கம் முன்­வைத்­துள்ள தனி நபர் பிரே­ர­ணையை அர­சாங்கம் நிறை­வேற்ற வேண்டும். இதன்­மூலம் மாகாண சபைத் தேர்­தல்­களை விரைந்து நடத்த முடியும் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இத­னை­விட கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பில் பெப்ரல் அமைப்பின் ஏற்­பாட்டில் எதிர்க்­கட்சி தலை­வர்­களின் சந்­திப்பு கொழும்பில் நடை­பெற்­றி­ருந்­தது. இதன்­போது மாகாண சபைத் தேர்­தலை பழைய முறை­மையின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக நடத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.

இந்த சந்­திப்பில் கலந்­து­கொண்ட கட்­சி­களின் தலை­வர்கள், மாகாண சபைத் தேர்­தலை எந்த முறை­மையில் நடத்­து­வது என்­பது குறித்து ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற விசேட தெரிவுக் குழு அது குறித்து ஆராய்ந்து முடி­வினை அறி­விக்­கட்டும், அதற்கு முன்னர் பழைய தேர்தல் முறை­மையில் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை அர­சாங்கம் நடத்த வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர்.

இத­னை­விட பழைய தேர்தல் முறை­மையின் கீழ் மாகாண சபைத் தேர்­தலை விரை­வாக நடத்­து­வ­தற்கு சாத­க­மான வகையில் பெண்கள் மற்றும் இளைஞர் பிர­தி­நி­தித்­து­வத்­துக்கு வேட்­பு­மனுத் தாக்­கலின் போது 25 வீத ஒதுக்­கீட்டை வழங்க எழுத்து மூலம் இணக்­கமும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 43 அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் ஏக­ம­ன­தாக தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு இந்த விட­யத்தில் இணக்கம் தெரி­வித்­துள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மொத்­தத்தில் மாகாண சபைத் தேர்­தலை பிற்­போ­டாது உட­ன­டி­யாக இந்த வரு­டத்­துக்குள் நடத்த வேண்டும் என்­பதே எதிர்க்­கட்­சி­க­ளது கோரிக்­கை­யா­க­வுள்­ளது. இதற்­கான அழுத்­தங்­களை வழங்கும் வகை­யி­லேயே எதிர்க்­கட்­சி­களின் தலை­வர்கள் ஒன்­றி­ணைந்து தற்­போது செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

உண்­மை­யி­லேயே மாகாண சபைத் தேர்­தலை நடத்தும் விவ­கா­ரத்தில் தேசிய மக்கள் சக்தி அர­சாங்­க­மா­னது ஒரு நிலைப்­பாட்டில் இல்லை என்­பது தற்­போது நன்கு தெளி­வா­கி­யுள்­ளது.

மாகாண சபைத் தேர்­தலை இந்த வரு­டத்­துக்குள் நடத்­துவோம் என்று தேசிய மக்கள் சக்­தியின் அமைச்­சர்கள் சிலர் தெரி­வித்து வரு­கின்­றனர். ஆனால், இந்த வரு­டத்­துக்குள் தேர்­தலை நடத்தும் நிலைமை இல்லை என்று ஜே.வி.பி.யின் செய­லாளர் ரில்வின் சில்வா யாழ்ப்­பா­ணத்தில் தெரி­வித்­தி­ருந்தார்.

கடந்த 23ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்­தி­ருந்த ஜே.வி.பி.யின் செய­லாளர் ரில்வின் சில்வா, மாகாண சபைத் தேர்­தலை இந்த ஆண்­டுக்குள் நடத்த முடி­யாது, தேர்­தலை நடத்­து­வ­தற்கு இந்த ஆண்டு வரவு, செலவுத் திட்­டத்தில் ஒதுக்­கீடு செய்­யப்­பட்ட நிதி தித்வா சூறா­வ­ளியால் ஏற்­பட்ட பாதிப்­பு­க­ளி­லி­ருந்து மீள்­வ­தற்­காக செல­வி­டப்­பட்­டுள்­ளது என்று தெரி­வித்­தி­ருந்தார். அத்­துடன் மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­மாறு இந்­தியா எந்­த­வ­கை­யிலும் அழுத்­தங்­களைக் கொடுக்­க­வில்லை என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

ஜே.வி.பி.யின் செய­லாளர் ரில்வின் சில்வா, மாகாண சபைத் தேர்­த­லுக்கு ஒதுக்­கப்­பட்ட நிதி தித்வா சூறா­வளி அனர்த்­தத்தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்டு விட்­ட­தாக தெரி­வித்­தி­ருந்த நிலையில், அதனை மறுக்கும் வகையில் தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை பேச்­சா­ள­ரான நளிந்த ஜய­திஸ்ஸ, கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அமைச்­ச­ரவைத் தீர்­மா­னங்­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.

மாகாண சபைத் தேர்­தலை வெகு­வி­ரைவில் நடத்­து­வதே அர­சாங்­கத்தின் முதன்மை இலக்­காகும். அதற்­கான நிதி சிக்­கல்கள் எதுவும் இல்லை. எனினும், தேர்தல் முறைமை தொடர்­பான சட்ட சிக்­கல்­க­ளுக்கு பாரா­ளு­மன்றக் குழு ஊடாக தீர்வு காணப்­பட்­ட­வு­ட­னேயே தேர்தல் நடத்­தப்­படும் என்று அமைச்சர் நளிந்த ஜய­திஸ்ஸ சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு நிதி இல்லை என்று தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்தின் பிர­தான பங்­காளிக் கட்­சி­யான ஜே.வி.பி.யின் செய­லாளர் ரில்வின் சில்வா குறிப்­பிட்­டுள்ள நிலையில் அந்தக் கட்­சியைச் சேர்ந்த முக்­கிய அமைச்சர் மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு நிதி ஒரு பிரச்­சி­னை­யில்லை என்று தெரி­வித்­தி­ருந்தார்.

இதே­போன்றே மாகாண சபைத் தேர்­தலை இந்த ஆண்­டுக்குள் நடத்தும் நிலைப்­பாட்டில் அர­சாங்கம் உள்­ளது. தேர்­தலைக் கண்டு அர­சாங்கம் அச்­ச­ம­டை­ய­வில்லை என்று தேசிய மக்கள் சக்­தியின் விஞ்­ஞான மற்றும் தொழில்­நுட்ப அமைச்சர் கிரி­சாந்த அபே­சேன கடந்­த­வாரம் தெரி­வித்­தி­ருந்தார்.

அவர் அவ்­வாறு தெரி­வித்­தி­ருந்த நிலை­யி­லேயே ஜே.வி.பி.யின் செய­லாளர் ரில்வின் சில்வா தனது மாற்று  நிலைப்­பாட்டை அறி­வித்­தி­ருந்தார். அதனை மறுக்கும் வகையில் அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் நளிந்த ஜய­திஸ்ஸ கருத்து கூறி­யி­ருந்தார்.

மாகாண சபைத் தேர்தல் விவ­கா­ரத்தில் இவ்­வாறு தேசிய மக்கள் சக்­திக்­குள்­ளேயே பல்­வேறு முரண்­பா­டான நிலைமை காணப்­ப­டு­கின்­றது. இத­ன­டிப்­ப­டையில் நோக்கும் போது மாகாண சபைத் தேர்­தலை இந்த வரு­டத்­துக்குள் நடத்தும் நோக்கம் அர­சாங்­கத்­துக்கு இல்லை என்­பது நன்கு புல­னா­கி­றது.

தாம் ஆட்­சிக்கு வந்­த­வுடன் ஒரு வருட காலத்­துக்குள் மாகாண சபைத் தேர்­தல்­களை நடத்­துவோம் என்று தேசிய மக்கள் சக்­தி­யா­னது உறுதி வழங்­கி­யி­ருந்­தது. ஜனா­தி­பதித் தேர்­தலின் போதும், பாரா­ளு­மன்றத் தேர்­தலின் போதும் இத்­த­கைய உறு­தி­மொ­ழிகள் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. ஆனால், இன்று தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து ஒன்­றரை வரு­டங்கள் கடந்து விட்­டன. ஆனால், மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வது குறித்து அர­சாங்கம் சாக்­கு­போக்­கு­க­ளையே கூறி வரு­கின்­றது.

மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கு அர­சாங்கம் கடந்த மார்ச் மாதம் வெளி­வி­வ­கார அமைச்சர் விஜித்த ஹேரத் தலை­மையில் பாரா­ளு­மன்ற விசேட குழுவை அமைத்­தி­ருந்­தது. இந்தக் குழுவில் எதி­ர­ணியின் சார்பில் அங்கம் வகிக்கும் உறுப்­பி­னர்கள் மாகாண சபைத் தேர்­தலை பழைய தேர்தல் முறை­மையின் கீழ் உட­ன­டி­யாக நடத்த வேண்டும் என்றும் அதன் பின்னர் புதிய முறைமை குறித்து ஆராய முடியும் எனவும் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

இந்தக் குழு­வா­னது ஜூன் மாதத்­துக்குள் அறிக்­கையை சமர்ப்­பிக்க வேண்டும். ஆனால், கால­அ­வ­காசம் போதாது என்று கூறி குழுவின் பதவிக் காலத்தை நீடிப்­ப­தற்கு தற்­போது அர­சாங்கம் முயன்று வரு­கின்­றது. ஆனால், இதற்கும் எதி­ரணி உறுப்­பி­னர்­களின் கடும் ஆட்­சே­பனை தெரி­வித்து வரு­கின்­றனர்.

அர­சாங்­க­மா­னது வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். மாகாண சபைத் தேர்­தலை ஒரு வரு­டத்­துக்குள் நடத்­து­வ­தாகக் கூறிய அரசாங்கம், தற்போது அது தொடர்பில் கணக்கெடுக்காத நிலைமை நீடித்து வருகின்றது. நாட்டில் மாகாண சபைகளுக்கு 2014 ஆம் ஆண்டின் பின்னர் தேர்தல் இடம்பெறவில்லை.

மக்களின் ஜனநாயக உரிமைகளை தோண்டிப் புதைக்கும் வகையிலேயே இந்த தேர்தலுக்கான இழுத்தடிப்பு அமைந்திருக்கின்றது. அன்று எதிரணியில் இருந்தபோது தேசிய மக்கள் சக்தியானது சகல தேர்தல்களையும் உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. ஆனால், இன்று ஆளுங்கட்சியான பின்னர் மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் இழுத்தடிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனியாவது இந்த விடயத்தில் குழப்பத்தை தவிர்த்து தேர்தல் நடத்துவதற்கு முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் தீர்வுக்கு ஒத்துழைப்பது இந்தியாவின் தார்மீகக்...

2026-06-07 14:13:43
news-image

மாகாண சபைத் தேர்தல் விட­யத்தில் பெரும்...

2026-05-31 12:51:21
news-image

ஜனாதிபதி அநுரவின் கூற்றும் நல்லிணக்கத்தின் அவசியமும்

2026-05-24 11:14:47
news-image

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் பொறுப்புக்கூறலின் அவசியமும்

2026-05-17 13:57:47
news-image

ஜனாதிபதிக்கான கம்பன் விருதும் தமிழ் மக்களின்...

2026-05-10 15:14:37
news-image

இந்திய துணை ஜனாதிபதியின் ஒற்றுமைக்கான அழைப்பு

2026-04-26 10:45:41
news-image

தற்போதைய மோசடி தொடர்பில் உடனடி விசாரணையே...

2026-04-19 12:15:35
news-image

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநிறுத்துங்கள்

2026-04-11 18:26:09
news-image

தமிழ்த் தேசியக் கட்­சி­க­ளுக்­கி­டையில் பொது இணக்­கப்­பாடு...

2026-04-05 10:38:09
news-image

மத்திய கிழக்கு மோதல் விவகாரத்தில் நடுநிலைமை...

2026-03-29 11:34:39
news-image

எரி­சக்தி நெருக்­க­டிக்கு தீர்வு காண்­ப­தற்கு தேசிய...

2026-03-22 15:06:40
news-image

உலகளாவிய நெருக்கடியை சந்திக்க தயாராக வேண்டும்

2026-03-15 13:55:18