பிரபல எழுத்தாளர் சந்திரா ரவீந்திரன் எழுதிய செம்பொன் (நாவல்) மற்றும் வனஸ்பதி (சிறுகதைகள்) ஆகிய இரண்டு நூல்கள் லண்டன் ஆர்ச்வே முருகன் ஆலய மண்டபத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி வெளியீட்டு வைக்கப்பட்டது.
ஊடகவியலாளர் இளயதம்பி தயானந்தா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவை லண்டன் என்பீல்டு நாகபூசணி அம்மன் ஆலய பிரதம குரு சிவசிறி கமலநாதன் துணைவியாரும் மக்கள் விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர்.
இவ்விழாவில் சாம் பிரதீபன் மு. நற்குணநாதன் இராஜேஸ்வரி பாலசுப்பிர மணியம் நளாயினி ரவீந்திரன் கலைவிழி உமா காந்தி படா சுப்பிரமணியம் ஆகியோர் உரையாற்றினர்.
பேராசிரியர் மு.நித்தியானந்தன் சிறப்புரை ஆற்றும் பொழுது "செம்பொன் நாவல் மூலம் சந்திரா ரவீந்திரன் சிறந்த நாவலாசிரியர் ஆக உயர்ந்துள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தாளர் சந்திரா ரவீந்திரன் யாழ்.பருத்தித்துறை ஆத்தியடியை பிறப்பிடமாகக் கொண்டவர். 1980 களில் சந்திரா தியாக ராஜா என்ற பெயரில் பல ஆக்கங்களை எழுதியுள்ளார். வீரகேசரி, தினகரன், தினக்குரல், ஈழநாடு மற்றும் மல்லிகை சிரித்திரன் ஆகிய பத்திரிகைகளில் இவரது ஆக்கங்கள் நடைபெற்றிருந்தன.
செம்பொன் நாவலும் வனஸ்பதி சிறுகதைத்தொப்பும் இவர் எழுதிய 4 ஆவதும் 5 ஆவதும் நூல்களாகும்.
























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM