பெண்களை அவமரியாதை செய்யும் விதமாகப் பேசிய இஸ்லாமிய மதகுருவுக்கு, போதனை நடத்த தற்காலிகத் தடை விதித்து சவுதி அரேபியா உத்தரவிட்டுள்ளது.
சவுதியின் அஸீர் மாகாணத்தைச் சேர்ந்த மதகுரு ஸாத் அல் ஹிஜ்ரி. அண்மையில், ‘ஆண்களின் புத்திசாலித்தனத்தில் காற்பங்குதான் பெண்களுக்கு இருக்கிறது. அதனால், பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்தக் கருத்து உள்நாட்டிலும், சமூக வலைதளங்கள் வாயிலாக வெளிநாடுகளிலும் கடும் எதிர்ப்பைப் பெற்றது. பெண்கள் உரிமை அமைப்புகள் அவரை தகுதி நீக்கம் செய்யுமாறு கோரி அறிக்கைககள் விடுத்தன.
இதையடுத்து, தொழுகைகளுக்குத் தலைமை தாங்குவது, மார்க்கப் பிரச்சாரம் செய்வது உள்ளிட்ட அனைத்து சமய நடவடிக்கைகளில் இருந்தும் அவர் தற்காலிகமாகப் பதவி விலக்கப்பட்டுள்ளார்.
“சமயத்தைத் தளமாக வைத்துக்கொண்டு பெண்களுக்கான சமத்துவம், சுயமரியாதை, கௌரவம் என்பனவற்றைச் சிதைக்கும் இஸ்லாத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இடம் கிடையாது என்பதைத் தெரிவிக்கும் விதமாகவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடை விதிக்கப்பட்ட பின் பேசிய ஹிஜ்ரி, குறிப்பிட்ட அந்தக் கருத்தை தான் வாய் தவறிக் கூறிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
சவுதியில், பெண்கள் படிப்பதற்கும், வெளியே பயணம் செய்வதற்கும், ஏனைய பல நடவடிக்கைகளுக்கும் வீட்டின் ஆண் தலைவர் - தந்தை, சகோதரர், கணவர், மகன் - ஒருவர் அனுமதி வழங்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM