2026 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் கிரகங்களின் இடமாற்றங்கள் மற்றும் சேர்க்கைகளின் அடிப்படையில் 12 ராசிகளுக்குமான பொதுவான அறிமுகம் மற்றும் முக்கிய பலன்கள்.
1. மேஷம்
தனக்கென்று ஒரு கொள்கை வகுத்து செயல்டும் மேஷ ராசி வாசகர்களே ,,!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியில் ஆட்சி பெற்றிருப்பதும், சூரியன் தன ஸ்தானத்தில் அமா்வதும், மறைவு ஸ்தானங்களை குரு பார்வை பெறுவதும் நன்மையும், சுப பலன்களையும். பொருளாதார மேன்மையும் உண்டாகும்.
ராசியில் செவ்வாய் அமா்ந்து கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான வளா்ச்சியை பெற்று தருவார். மனவலிமையும் எதிர்கால திட்டங்களுக்கு ஊக்கமும் தருவார். விவசாயம் விளை பொருள் விற்பனை , பாதுகாப்பு பணியில் இருப்பவருக்கு தைரியமும், துணிச்சலும் தருவார். பஞ்சமாதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் அமா்வது பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுவீா்கள். எதை தேடி அலைந்தீா்களோ,,,! அதனை அடைவதற்கு உங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும். வார்த்தை ஜால பேச்சால் பிறரிடம் காரியம் சாதிக்கும் திறனும் உண்டாகும்.
சுகஸ்தானத்தில் குரு அமர்ந்து எட்டாமிடம் தொழில் ஸ்தானம், விரைய ஸ்தானத்தை பார்வை செய்வது.. குரு பார்வை இருக்கும் வரை விரைய சனியின் தாக்கம் இருக்காது. நல்ல பலனை பெறுவீா்கள்.. தேவையற்ற செலவுகள் குறையும். உடல் ரிதியான துன்பம் நீங்கி, மன அமைதி பெறுவீா்கள். செய்யும் தொழிலில் பண முடக்கம் குறையும். புதிய தொழில் முயற்சியை கைவிட்டு, இருக்கும் தொழிலை வளப்படுத்தி கொள்வீா்கள் குறைந்த பட்ச முதலீடுகளில் நல்ல லாபம் பெறுவீா்கள்.
பஞ்சம ஸ்தானத்தில் கேது இருந்து சில காரிய தடைகளை தருவார். இருப்பினும் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி கொள்வவீர்கள். கலைத்துறை சார்ந்தவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சோதனை காலங்களில் நினைத்ததை அடைவீா்கள். பாதுகாப்பு பணியில் திறம்பட செயல்பட்டு மேன்மை அடைவீா்கள். உழைப்பாளா்களுக்கு சற்று அதிகமான வேலை பளு இருக்கும். நல்லவா்களுக்கு உதவி செய்வதில் தடை இருக்காது. ஒரு வேலையை திரும்ப செய்யும் படியான சூழ்நிலை உருவாகும். பொது வாழ்விற்கான ஈடுபாடுகளை இனி குறைத்து கொள்வீா்கள். சேமிப்புகள் கரையும். வெளி நபர்களிடம் பழகும் போது சற்று கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஓரஞ்சு, சிவப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், வியாழன், ஞாயிறு.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
26-06-2026 வெள்ளி மாலை 03.08 முதல் 28-06-2026 ஞாயிறு இரவு 2.42 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு மாலை 04.30 - 06.00 ராகு காலத்தில் பைரவருக்கு எட்டு நல்லெண்ணெய் தீபமேற்றி மிளகு பொங்கல் நைவேத்தியம் வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் சிறப்பாக அமையும்.
2. ரிஷபம்
தைரியமும், துணிச்சலும் கொண்டு செயல்படும் ரிஷப ராசிவாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதும், குரு மூன்றில் அமர்ந்து லாபஸ்தானத்தை பார்வை இடுவதும், தொழில் ஸ்தானத்தில் ராகு அமர்ந்து இருப்பது உங்களின் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். நினைத்த காரியம் கைகூடும். வெளிநாடு யோகம் உண்டாகும். கொடுத்த இடத்தில் தடையின்றி பணவரவு இருக்கும் கெடுபலன்கள் குறைந்து, நன்மை உண்டாகும்.
ராசியில் சூரியன் அமர்ந்திருப்பதால் மனவலிமையும், கடமை உணர்வும் கொண்டு விளங்குவீர்கள். அரசியலில் உங்களின் நேர்மை பாராட்டும்படி அமையும். தொய்வில்லாத அரசியலில் உங்களின் தலைமையின் கீழ் பணி செய்யும் வாய்ப்பு அமையும். சொன்னபடி செய்தால் சகல நலன்களும் கிடைக்கும் என்பது உங்களுக்கு சத்தியமாக அமையும். வாழ்க்கையில் இதுவரை பல்வேறு சோதனைகளால் பாதிப்பை அடைந்தீர்கள். இனி அதுபோல கஷ்டங்கள் வராது. தனித்துவத்துடன் உங்களின் பங்கு சிறப்பாக அமையும். நீங்கள் செய்யும் தொழிலுக்கு உங்களின் வாரிசுகள் உடனிருந்து உதவிகளை செய்வார்கள்.
மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் பெறுவார்கள். பொது வாழ்வில் பிறரின் கஷ்டத்தை உணர்ந்து உதவி செய்வீர்கள். வைத்தியச் செலவு இருக்கும். இருந்தாலும் உடல்நலனில் பெரிய பாதிப்பு ஏதுவும் இருக்காது. உங்களின் ஒவ்வொரு காரியமும் வெற்றியை தரும். முடிந்தளவு கோபத்தை விடுத்து சமரச உணர்வுகளை கொண்டு விளங்குவது நன்மையை தரும். அரசு, அரசாங்க பணியில் இருப்பவர்களுக்கு வேலையில் இருந்த பணி சுமை இனி படிப்படியாக குறையும். சுதந்திரமான செயல்பாடு இருக்கும்.
தனஸ்தானாதிபதி புதன் ராசிநாதன் சுக்கிரனுடன் இணைந்து தனஸ்தானத்தில் இணைவு பெறுவது பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவீர்கள். கலைத் துறையினருக்கு நல்ல காலமாக இருக்கும். வெளியூர் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி பாராட்டைப் பெறுவீர்கள். குரு மூன்றில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தை பார்வை இடுவதால் திருமண வாய்ப்பு அமையும். சிலருக்கு புத்திர புத்திரிகளின் திருமண வாய்ப்பு அமையும். கொடுக்கல் வாங்கலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் பூர்வீக சொத்து சார்ந்த விடயங்கள் சுமூகமாக பேசி தீர்ப்பீர்கள். யாரையும் நம்பிக்கை கொண்டு இருக்காமல் உங்களின் காரியத்தை நீங்களே செய்து கொள்வீர்கள். வாகனம் புதுப்பித்தல், புதிய வாகனம் வாங்குதல் வாய்ப்பு அமையும். பெண்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆடம்பரத்தில் அதிகம் விருப்பம் இல்லாமல் எளிமையாக இருக்க எண்ணுவீர்கள். சாதனைகளை செய்ய எத்தனை சோதனை வந்தாலும் எதிர்கொண்டு செயல்படுவீர்கள். உறவுகளில் இருந்து வந்த விரிசல் மறைந்து, நன்மை பெறுவீர்கள். பாதுகாப்பான சூழ்நிலைகளை உருவாக்கி கொள்வீர்கள். இன்ப சுற்றுலா செல்வதற்கு சிலருக்கு வாய்ப்பு அமையும். பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, பச்சை, சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, ஞாயிறு,
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
01-06-2026 திங்கள் இரவு 07.20 முதல் 04-06-2026 வியாழன் காலை 06.41 மணி வரையும்.
28-06-2026 ஞாயிறு இரவு 02.43 முதல் 01-07-2026 புதன் பகல் 02.08 மணி வரையும்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழக்கிழமை காலை 06.00 - 07.00 மணி வரை விநாயகர் கோவில் சென்று விநாயகருக்கு எருக்கம்பூ மாலை / அருகம்புல் மாலை சாற்றி, தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி அவல் பொரிகடலை வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றி தரும்.
3. மிதுனம்
நினைத்ததை செயலில் காண்பிக்க துடிக்கும் மிதுன ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியிலேயே அமர்ந்தும் குரு தனஸ்தானத்தில் அமர்ந்தும் லாபாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்றிருப்பது மிக சிறப்பான நல்ல பலன்களை பெற்று தரும். எடுத்த காரியத்தில் ஜெயம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதி நிறைவேறும். சாதனைகளை செய்யும் துணிவு கிடைக்கும். எதிர்கால பலன்கள் சிறப்பாக அமையும். சுதந்திரமாக செயல்பட விரும்புவீர்கள்.
புதிய முயற்சிகள் எடுப்பீர்கள். உங்களின் ராசியை கேது பார்வை இடுவதால் நல்ல முயற்சிகள் வெற்றியை தரும். சிலருக்கு பெண்களின் மூலம் ஆதாயம் கிட்டும். அதிர்ஷ்டத்தை நம்பாமல் சுய வளர்ச்சியை நம்பி செயல்படுவீர்கள். பாடல்கள் எழுதுதல், மேடை பேச்சு, உள்ளிட்ட கற்பனை திறனை வளர்த்துக் கொள்வீர்கள். சரளமான பேச்சு திறமையை வளர்க்கவும். தொழிலில் வாடிக்கையாளர்களை வசீகரம் செய்ய துணை புரியும். மூன்றாம் அதிபதி சூரியன் பனிரெண்டில் மறைவு பெறுவது அரசியலிலும் அரசு சார்ந்த துறையிலும் பணிபுரிபவருக்கு நன்மை உண்டாகும். சோதனைகளை கண்டு அஞ்சாமல் எதிர்கொண்டு செயல்படுவீர்கள். குடும்ப பாரத்தை குறைந்து கொள்ளும் வாய்ப்பு அமையும்.
தனஸ்தானத்தில் குரு அமர்ந்து பார்வை இடும் இடங்கள் மறைவு ஸ்தானங்களாக அமையும் போது ஆறாமிடத்தை பார்வை இடுவது உங்களின் தீராத கடன் தீர்த்து கொள்ள வாய்ப்பு அமையும். வங்கி மூலம் கடன் பெற்று அதிக வட்டியை குறைத்து கொள்ள முயற்சி எடுத்து தன்மை பெறுவீர்கள். அட்டமஸ்தானத்தை பார்வை இடுவது நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த வழக்குகள் விரைவில் தீர்வாகும். செய்யாத சில குற்றங்களுக்கு ஏற்பட பழிசொல்லுக்கு தீர்வு கிடைக்கும். யார் மீதும் நீங்கள் பழிசொல்லாமல் குற்றம் குறைகளை களைந்து மேன்மை பெறுவீர்கள். தொழில் ஸ்தானத்தை குரு பார்வை இடுவது தொழில் ஸ்தானத்தில் அமர்ந்த சனியுடன் இணைந்து செயல்படும் போது செய்யும் தொழில் நல்ல நன்மையும். முன்னேற்றமும் உண்டாகும்.
அரசியலிலும், அரசாங்கத்திலும் சேவை செய்து வருபவருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கப் பெறுவீர்கள். அரசியலில் நல்ல ஆலோசராக இருப்பீர்கள். சாதூர்யமாக பேசி சில காரியங்களை சாதித்து கொள்வீர்கள். ஆறாமிடத்து சந்திரன் சில எதிர்பாராத செலவுகளுக்காக கடன்படும் நிலை உண்டாகும். குடும்பத்தின் தேவைகளுக்கு பணபழக்கம் இருந்து கொண்டே இருக்கும். யாரையும் உதாசீனம் செய்யாமல் எல்லோரிடமும் அன்புடன் இருப்பீர்கள். உடன் பணிபுரியும் நண்பர்களுக்கு பல உதவிகளை செய்வீர்கள்.
கலைத்துறையினர் படிப்படியாக முன்னேற்றம் காண்பீர்கள். சமூக விழிப்புணர்வு சார்ந்த கலை நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கும். குறுகிய முதலீடுகள் மூலம் நல்ல வருமானம் பெறுவீர்கள். விரிவான தொழில் வளர்ச்சிக்கு சில காலம் காத்திருப்பது நல்லது. குடும்ப நலன் சார்ந்த சில காரியம் முடிவெடுக்கும் போது அனைவரிடமும் ஆலோசனை கேட்டு பின்பு உங்களின் முடிவை எடுப்து நிறைவான வளம் தரும். கோவில் எழுப்புவது. பராமரிப்பது.. சார்ந்த வகையில் உங்களின் ஆலோசனை சிறப்பாக அமையும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, தென்மேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வியாழன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
04-06-2026 வியாழன் காலை 06.42 முதல் 06-06-2026 சனி மாலை 04.15 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து துளசி மாலை சாற்றி, வெண்ணை வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர உங்களின் வேண்டுதல் விரைவில் நிறைவேறும்.
4. கடகம்
காலத்தையும், சூழ்நிலையும் அறிந்து அதற்கேற்ப செயல்படும் கடக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசிநாதன் நீசமாகி இருப்பதும் ராசியில் குரு உச்சம் பெற்று நீச சந்திரனை உச்ச பார்வையாக பார்ப்பதும் நீசபங்க ராஜயோக பலனை பெற்று தரும். அரசியலிலும், முக்கிய அரசு பதவியிலும் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வுகள் உண்டாகும். யாருக்கும் எதிலும் எந்த சூழ்நிலையிலும் கொடுத்த வாக்கை நிறைவேற்றி தருவீர்கள்.
உங்களின் ராசியில் குரு உச்சம் பெற்றிருப்பதால்.. நீங்கள் எடுத்த காரியம் ஜெயம் உண்டாகும். ராசிநாதன் நீசமாகி, பார்வை பெறுவது இன்னும் பல சிறப்புகளை பெறுவீர்கள். எதிர்பாராத பதவி உயர்வு, முக்கிய பொறுப்புகள் வகிக்கும் வாய்ப்புகள் அமையும். அரசியல்வாதிகளுக்கு இது சரியான முன்னேற்றத்தை பெற்று தரும். கொடுத்த இடத்தில் பணம், பொருள் விரைவில் கிடைக்க பெறுவீர்கள்.
தன ஸ்தானத்தில் கேது அமர்வது உங்களின் பொருளாதாரம் மேன்மையை அடையும் வாய்ப்புகள் அமையும். ராசிநாதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்வது பூர்வீக சொத்துகள் சார்ந்த பேச்சு சுமூகமான சூழ்நிலையை பெற்று தரும். காரியத்தில் கவனம் செலுத்தி சிறப்பான செய்து முடிப்பீர்கள்.
பொது துறைகளில் பணிபுரிந்து வருபவருக்கு சிறப்பு சலுகைகளும், சேவை செய்வதில் நிறைய மாற்றங்களையும் செய்வார்கள். இதனால் புதிய சேவையை தொடர வேண்டிவரும். பல தடைகளை நீங்கி புதிய வழிமுறைகளை செயல் படுத்துவீர்கள்.
அட்டமஸ்தானத்தில் ராகு இருந்து சில தடைகளை செய்து வந்தாலும் பெரிய பாதிப்பை தரமாட்டார். இனி பாக்கிய ஸ்தானத்தில் சனி அமர்வதும் சனியால் வளம் பெறும் நிலை உருவாகும். பாக்கியஸ்தானதிபதி சனியை பார்ப்பது இன்னும் சிறப்பு. கருத்து வேறுபாடுகளை களைந்து மன மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். உழைப்புக்கு முக்கியம் தருவீர்கள். தொழிலுக்கு முதலாளியாக இருந்தாலும் உழைப்பதை மட்டும் விடமாட்டீர்கள்.
உங்களின் தொழில் ஸ்தானாதிபதியும், யோகாதிபதியுமான செவ்வாய் ஆட்சி பெற்று ராசியை பார்வை இடுவதும் குருவை பார்ப்பதும் தொழிலில் சிறப்பாக வளர்ச்சியை பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை உண்டாக நீங்கள் எடுக்கும் முயற்சி நல்ல பலனை பெற்று தரும். தொழில் முதலீடுகள் மூலம் நல்ல வரும்படி கிடைக்கும். லாபஸ்தானத்தில் சூரியன் அமர்ந்து சந்திரனை பார்ப்பது கொடுத்த வைத்த பலனாக அமையும். தனாதிபதி லாபஸ்தானத்தில் அமர்ந்து பூர்வ புண்ணியஸ்தானத்தை பார்ப்பது ஜென்ம சாபங்கள், தோசங்களை பரிகாரம் மூலம் சரி செய்து கொள்ள சரியான நேரமாக அமையும். கருத்து வேறுபாடுகளுடன் பிரிந்தவர்கள் இனி இணைவார்கள். முக்கிய பிரமுகரின் சந்தித்து பேசுவதன் மூலம் எதிர்கால நற்பலன்களின் மேன்மை அடைவீர்கள். பொது வாழ்வில் மேன்மை அடைவீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி பயிலும் வாய்ப்புகள் அமையும் கலைஞர்கள் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, சிவப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், செவ்வாய், வியாழன்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
06-06-2026 சனி மாலை 04.16 முதல் 08-06-2026 திங்கள் இரவு 11.23 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
புதன், சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில் சென்று மகாலெட்சுமியை வணங்கி தாமரை பூ வைத்து நெய் தீபம் ஏற்றி வணங்கி வர உங்களின் பொருளாதாரம் மேன்மை அடையும்.
5. சிம்மம்
சாதுர்யமும், துணிச்சலும் கொண்டு செயல்களை செய்யும் சிம்ம ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிநாதன் சூரியன் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து சுக ஸ்தானத்தில் சந்திரனை பார்வை இடுவதும். யோகாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று அமர்வதும் சிறப்பான நற்பலன்களை பெற்று தரும். எதை செய்தாலும் அதனை ஆழமாக யோசித்து செய்வீர்கள். கடுமையான சோதனைகளை கூட எளிமையாக செய்து நற்பலன் பெறுவீர்கள். கொடுத்த இடத்தில் இருந்து விரைவில் நல்ல பதில் உங்களை தேடிவரும். எதிரிக்கு கூட கெடுதல் நினைக்காத உங்களின் நல்ல உள்ளத்திற்கு ஒரு தீங்கும் நடக்காது.
ஜென்ம கேது உங்களின் உடல் பலத்தையும், மனிதன் வலிமையும் தந்து பல உதவிகளை செய்வார். இதுவரையில் பல சோதனைகளை சந்தித்து வந்த நீங்கள் இனி அதிலிருந்து நிரந்தர விடுதலையைப் பெறுவீர்கள். சுகஸ்தானத்தில் சந்திரன் ராசிநான் சூரியனின் பார்வை பெறுவதால் தாயார், தந்தை உடல்நலன் சிறப்பாக அமையும்.
நட்பு ரீதியான சந்திப்புகள் சிறப்பாக அமையும். பொது நலன் கருதி நீங்கள் செய்யும் அனைத்து காரியமும் வெற்றியை பெற்று தரும். உங்களை நம்பியவர்களை கைவிட மாட்டீர்கள். கடைசி வரை அவர்களுக்கு உதவி செய்வீர்கள். சமூக சேவை செய்வது, முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவி செய்வதில் அமைதி மகிழ்ச்சி கொள்வீர்.
களத்திர ஸ்தானத்தில் ராகு திருமண தடைகளை தந்தாலும் திருமண முயற்சிகள் தொடர்ந்து இருக்கும். கூட்டுத் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஓன்லைன் வர்த்தகம் சிலருக்கு வருமானம் பெற்று தரும். பொது துறையிலும், அரசியலிலும் இருப்பவருக்கு எதிர்பாராத வளர்ச்சியை பெறுவீர்கள். எதையும் யோசிக்காமல் செய்ய மாட்டீர்கள். உங்களின் கருத்துக்கு முன்னுரிமை கிடைக்கப் பெறுவீர்கள். அட்டமத்து சனி குரு பார்வை பெறுவதால் அதிக பாதிப்பை தரமாட்டார்.
எனினும் பிறருக்கு பிணையம் இடுவதில் அதிக உரிமை எடுத்து செய்வதை.. தவிர்த்து விடுவது நல்லது. இதற்கு முன் ஜாமீன் போட்ட விடயம் கூட.. இப்பொழுது பாதிப்பை கொடுக்க வாய்ப்பாக அமையும் என்பதால் எதிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது.
உங்களின் யோகாதிபதி செவ்வாய் பலம் பெற்று இருப்பது உங்களுக்கு பக்கபலமாக அமையும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வைப்பீர்கள். லாபஸ்தானத்தில் புதன் ஆட்சி பெற்று தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரனுடன் இணைந்து அமர்ந்திருப்பது பொருளாதாரத்தில் மேன்மையை அடைவீர்கள். சுமையாக இருந்த அனைத்து காரியங்களும் சீராக அமையும்.
தெய்வ வழிபாடுகள். பரிகார பூஜைகள், அன்னதானம் செய்தல் மூலம் உங்களின் கர்ம வினைகளை தீர்த்து வைக்கும். புதிய திட்டங்களுக்கு சிறிது காலம் பிடிக்கும். அதுவரை சற்று பொறுத்து இருப்பது நல்லது. இனி வருங்காலம் சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டுமென்று காத்திருக்கும் போது, அதற்குரிய காலத்தில் பரிசுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். சகோதரரின் மூலம் சிலருக்கு ஆதாயம் கிடைக்கும். குரு விரையத்தில் இருப்பது புதிய தொழில் முயற்சி நல்ல பலனை பெற்று தரும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
சிவப்பு, பச்சை, ஓரஞ்சு.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, புதன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
08-06-2026 திங்கள் இரவு 11.24 முதல் 11-06-2026 வியாழன் அதிகாலை 04.15 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை ராகு காலத்தில் (09.00 - 10.30 மணிக்கு) பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும், ஆஞ்சநேயர் வழிபாடு செய்து நெய் தீபமேற்றி வணங்கி வர.. எல்லாம் நன்மையாக அமையும். எதையும் சாதிக்கும் வல்லமை உண்டாகும்.
6. கன்னி
கனவுகளை நனவாக்கி கொள்ள தீரமாக செயல்படும் கன்னி ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருப்பதும் லாபஸ்தானத்தில் குரு உச்சம் பெற்று அமர்ந்திருப்பதும் உங்களின் வாழ்வில் சிறப்பான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எதை செய்தாலும் அதற்கு ஒரு வழியை கண்டுபிடித்து செயல்படுவீர்கள். குடும்ப விருத்திக்கு வழி கிடைக்கும். அரசியலிலும், அறிவியலிலும் சிறந்து விளங்குவீர்கள். பொது விடயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பாதியில் நின்ற காரியம் செயல்பட துவங்கும்.
ராசிக்கு மூன்றாமிடத்தில் லாபஸ்தானாதிபதி சந்திரன் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தில் சூரியனை பார்ப்பதால் எடுக்கும் எந்த முயற்சியும் வெற்றியை தரும். அரசியலில் எதிர்பாராத திருப்பங்களும் அதன் பயனான உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்க பெறுவீர்கள். சத்ருஸ்தானத்தில் ராகு அமர்வதால் ராகு சின்ன உடல் உபாதைகளை தருவார். இளம் தெரியாத உடல் நல குறைவு ஏற்படலாம்.
காத்திருந்து பல காரியங்களை செய்து வந்தீர்கள். இனி உடனே செயல்பட துவங்கும். மறைமுகமான சில எதிரிகளை அடையாளம் காண்பீர்கள். களத்திர ஸ்தானத்தில் சனி பகவான் அமர்ந்து ராசியை பார்ப்பது. சிலருக்கு காதல் வெற்றியை தரும். சிலருக்கு போதாத காலமாக இருக்கும். பிறந்த ஜாதகத்தில் சனியில் பலத்தை பொருத்து அமையும். கூட்டு தொழிலில் முன்னேற்றம் இருக்கும். அதே நேரத்தில் தொழிலில் போட்டி இருக்கும். தைரியமுடன் செயல்பட வேண்டி வரும். கண்டக சனியை குரு பார்ப்பதால் கெடுபலன் இருக்காது.
அட்டம ஸ்தானாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பது பல சிறு சிறு கஷ்டங்களை அடைய வேண்டி வரும். யாரை நம்பி செயல்பட்டீர்களோ அவர்களால் நீங்கள் பெரும் துன்பம் அடைய வேண்டிவரும். தெரிந்த நபர்களே நம்மை ஏமாற்றுவது உங்களால் ஏற்க முடியாமல் போகும். பிணையம் இடுவதை தவிர்ப்பது நல்லது. விரையாதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் அமர்வது இது வரை நிலுவையில் இருந்த காரியம் செயல்பட துவங்கும். பொருளாதார நிலை மேன்மை அடையும்.
தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் புதனுடன் சுக்கிரன் இணைவு பெற்றிருப்பது தர்ம கர்மாதிபதி யோகமாக அமையும். தனியாகவோ அல்லது இணைந்தோ தர்ம காரியம் செய்வீர்கள். கோவில் திருவிழாகளிலும், கோவில் கும்பாபிஷேகத்திலும் கலந்து கொள்வீர்கள். ஆன்மீக பணிகள் சிறப்பாக அமையும். லாபஸ்தானத்தில் அமர்வது தன்னுடைய தேவைகளுக்கு ஏற்ப பணவரவு பொருளாதார மேன்மை, தங்க நகைகள் வாங்கும் யோகம் உண்டாகும். ஆசிரியராக பணியாற்றி வருபவர்களுக்கு பதவி உயர்வு இடமாற்றம் போன்ற சூழ்நிலைகள் உருவாகும். உங்களின் எண்ணம் போல வாழ்வு சிறக்கும். எதிர்பார்த்த காரியம் சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கல் விடயத்தில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்மேற்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வியாழன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
11-06-2026 வியாழன் அதிகாலை 04.16 முதல் 16-06-2026 சனி காலை 07.26 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறுகிழமைகளில் மாலை 04.30 - 06.00 மணிக்கு பைரவர் வழிபாடு செய்து நல்லெண்ணெய் தீபமேற்றி எள் கலந்த அன்னம் வைத்து. உங்களின் வேண்டுதலை சொல்லி வர ..,சகல வித காரியமும் அனுகூலமாக அமையும்.
7.துலாம்
துரிதமாக காரியத்தை செயல்படுத்தும் துலாம் ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்தும், ஏழாமாதிபதியான செவ்வாய் பார்வை பெறுவதும் உங்களின் சீரிய பணிகள் விரைந்து முடிப்பதுடன் காரியத்தை செயல்படுத்துவதில், ஆர்வம் செலுத்துவீர்கள். அரசியலில் ஆர்வமாக இருக்கும். நீங்கள் வெளியிலிருந்து வரும் விமர்சனங்களை எதிர்கொள்வீர்கள். வெற்றி பயணம் தொடரும்.
ராசிநாதனின் அருள் பார்வை மூன்றாமிடத்தில் அமைவது உங்களின் முயற்சிக்கு நல்ல பலன் அமையும். கொடுக்கல் வாங்கலில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும். காரிய அனுகூலம் உண்டாகும். சந்திரன் தனஸ்தானத்தில் பலம் பெற்று அமைவது. பொருளாதாரத்தில் மேன்மையை அடைவீர்கள். செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உணவகம் நடத்துபவர்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடக்கும்.
செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்து செயல்படுவீர்கள். பஞ்சமஸ்தானத்தில் ராகு இருந்து உங்களின் கர்மவினைகளை நீக்கும்படி பரிகார பூஜைகளை செய்து அதிலிருந்து விடுபட உதவி செய்வார். குலதெய்வம் தெரியாதவர்களுக்கு குலதெய்வம் தெரியவரும். புத்திர, புத்திரிகள் சந்தான விருத்திக்கு வழி கிடைக்கும்.
ஆறாமிடத்தில் சனி அமர்ந்து உடல் நலனில் அடிக்கடி பிரச்சனை வரும். பாதத்தில் எரிச்சல், மனஅழுத்தம் திடீர் கடன்படுதல், தேவையற்ற பகைமை உணர்வுகள் ஏற்படுதல் போன்ற அவஸ்தைகள் உண்டாகும். நினைத்த காரியம் சிறிது தடைபட்டாலும் விரைவில் நிறைவேறும்.
கடவுள் மீது பாரம் போட்டு உங்கள் செயலை தொடர்ந்து செய்தால் எல்லாமும் ஜெயம் உண்டாகும். இருப்பினும் சனி இருக்குமிடம் சிறப்பு என்பது போல எதிரிகளின் சூழ்ச்சிகளை தெரிந்து கொண்டு விரைவில் விடுதலை பெறுவீர்கள். குரு பார்வை சனிக்கு கிடைப்பது சனியால் வரும் துன்பம் நீங்கும் சுபிட்சம் பெறுவீர்கள்.
ஏழாமிட செவ்வாய் பெண்களுக்கு திருமணம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். நிலம் சார்ந்த பிரச்சனைகள் சுமூகமான தீர்வு கிட்டும் அமைதியாக எல்லாவற்றையும் செய்து முடிப்பீர்கள். பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வம் கொள்வீர்கள். அட்டம ஸ்தானத்தில் சூரியன் அமர்ந்து அரசு உத்தியோகம், அரசு பதவிகளை பெறும் வாய்ப்பு சிலருக்கு அமையும். பாக்கியஸ்தானத்தில் பாக்கியாதிபதி புதனுடன் ராசியாதிபதி சுக்கிரன் இணைவு பெறுவது எத்தனை தடைகள் வந்தாலும் அதனை உடைத்து பலம் பெறுவீர்கள்.
எத்தனை சோதனைகள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். தொழில் ஸ்தானத்தில் குரு உச்சம் பெற்றிருப்பது நினைத்து காரியத்தை ஜெயிக்க வைக்கும் திறன் பெறுவீர்கள். குரு பத்தில் தனித்திருந்தால் பதவி பறிபோகும் என்பார்கள். இம்மாதம் புதன் சுக்கிரன் சேர்க்கை வரை அத்தகைய துன்பம் வராது என்றாலும் பணிபுரியுமிடத்தில் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்காமல் புரிந்து கொண்டு சகித்து கொண்டு இருந்துவிட்டால் எல்லாம் சரியாகி விடும். லாப கேது உங்களுக்கு தேவைகளுக்கு சகல வசதிகளையும் கொடுத்து உதவி செய்வார். இம்மாதம் உங்களுக்கு நல்ல மாதமாக அமையும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, பச்சை, ஓரஞ்சு.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, செவ்வாய், புதன்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
13-06-2026 சனி காலை 07.27 முதல் 15-06-2026 திங்கள் காலை 09.52 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் ராகு காலத்தில் (09.00 முதல் 10.30 வரை) நவகிரக வழிபாடு செய்து ஒன்பது நல்லெண்ணெய் தீபமேற்றி வேண்டிக் கொள்ள தடைகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.
8.விருச்சிகம்
சாதிக்க நினைத்ததை விரைவில் சாதித்து காட்டும் விருச்சிக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ஆறாமிடத்தில் ஆட்சி பெற்று இருப்பதும் குரு பார்வை பெறுவதும் உங்களின் ராசிக்கு சூரியனின் பார்வை பெறுவதும் சிறப்பான நற்பலன்களை பெறுவீர்கள். எதனை செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்படி செய்வீர்கள். நம்பிக்கையுடன் செய்யும் எந்த காரியமும் சிறப்பாக அமையும். வரவுக்குள் செலவுகளை கட்டுபடுத்தினால் வளம் பெறுவீர்கள். குறுகிய காலத்தில் உங்களின் வணர்ச்சி மிக சிறப்பாக அமையும். வேண்டியதை தயக்கமின்றி கேட்டு பெறுவீர்கள்.
உங்களின் ராசியில் சந்திரன் நீசம் பெற்று குரு உச்சமான பார்வை பெறுவது நீச பங்க ராஜயோக பலனை பெறுவது சிறப்பு. எதிர்பாராத ராஜயோக பலன்களை பெறுவீர்கள். எதையும் சாதிக்க வேண்டுமென்று எண்ணும் உங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். சுகஸ்தானத்தில் ராகு அமர்வது உடல்நலனில் முன்னேற்றம் கிடைக்கும். தாயாருக்கு உடல்நல குறைவு உண்டாகலாம். சற்று கவனமுடன் இருப்பது நல்லது.
வீடு கட்டுதல், வாகனம் வாங்குதல் போன்ற வசதிகளைப் பெறுவீர்கள். நினைத்த காரியம் கைகூட எதையும் செய்வீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி அமர்ந்து குரு பார்வை பெறுவது குலதெய்வ வழிபாடு செய்வது சிறப்பு. சனி பார்வை தனஸ்தானத்திற்கு கிடைப்பது. பொருளாதாரத்தில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து முயற்சிகளும் கிடைக்கும். பணபலம் பெருகும்.
ஆறாமிடத்தில் ராசிநாதன் செவ்வாய் அமர்ந்து ராசியை பார்வை இடுவது மிகவும் சிறப்பாக அமையும் கொடுத்த வாக்குறுதியும் காப்பாற்றுவீர்கள். எந்த சவாலையும் முன்னின்று செயல்படுத்துவீர்கள். எதிரிகளின் தடைகளை முறியடித்து காட்டுவீர்கள்.
புதிய நல்ல திட்டங்களுக்கு உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஏழாமிடத்தல் சூரியன் அமர்ந்து ராசியை பார்வை இடுவது தொழில் சிறப்பான வளர்ச்சி பெறுவீர்கள். தொழிலாளர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டி செயல்படுவீர்கள். சாதனைகளை செய்ய வேண்டுமென்ற ஆர்வம் மேலோங்கும். புத்துணர்வுடன் இருப்பீர்கள். அரசியல் வாதிகளுக்கு நல்ல காலமாக அமையும்.
அட்டம ஸ்தானாதிபதியுடன் சுக்கிரன் இணைவு பெறுவது குரு பார்வை ராசிக்கு இருந்தாலும் திருமண தடை இம்மாதம் இருக்கும் சரியான கோணத்தில் உங்களின் செயல்பாடுகள் அமையும். எடுத்த காரியம் சிறுதடையுடன் நிறைவேறும். தொழில் ஸ்தானத்தில் கேது அமர்ந்து இருப்பது காரியம் சிறப்பாக அமையும். வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளும் அமைய பெறுவீர்கள்.
உங்களின் யோகாதிபதி சந்திரனை குரு பார்வை பெறுவது எத்தனை தடைகள் சோதனைகள் வந்தாலும் அதனை சிறப்பாக செய்து முடிக்கும் நல்ல வாய்ப்பை பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சி நடக்கும். குரு பார்க்க கோடி நன்மை என்பது வேலை உங்களின் ராசிக்கு இம்மாதம் முழுவதும் சிறப்பான நல்ல பலனை பெற்று தருவார்கள். இனி செய்வதை சரியான கோணத்தில் செய்து கொள்வது மிக சிறப்பு தொழில் சங்க பணிகளை சிறப்பாக செய்து பணியாளர்களுக்கு நல்ல பலனை பெற்று தருவீர்கள். வெற்றி பாதையில் பயணிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஓரஞ்சு, சிவப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், வியாழன், ஞாயிறு.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
15-06-2026 திங்கள் காலை 09.53 முதல் 17-06-2026 புதன் பகல் 12.24 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில் சென்று துளசி மாலை போட்டு அர்ச்சனை அபிஷேகம் செய்து உங்களின் வேண்டுதலை சொல்லி வர எல்லாம் சிறப்பாக அமையும். எடுத்த காரியம் கைகூடும். பொருளாதார மேன்மை அடையும்.
9.தனுசு
தன் பலம் அறிந்து எதிரியிடம் மோத நினைக்கும் தனுசு ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு அட்டம ஸ்தானத்தில் அமர்ந்து விரைய ஸ்தானத்தையும், தன ஸ்தானத்தையும் பார்வை இடுவது பொருளாதார சிக்கல்கள் விலகி நன்மை பெறுவீர்கள். குரு பார்க்குமிடம் சிறப்பு என்பதால் நன்மை கிடைக்க பெறுவீர்கள். மூன்றாமிட ராகு உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலனை தருவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியின் மேன்மை உண்டாகும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற பாடுபடுவீர்கள்.
எந்த காரியமாக இருந்தாலும் சனி வீட்டில் ராகு பலம் பொருந்தி இருப்பதால் அனைத்து முயற்சிகளிலும் மேன்மை பெறுவீர்கள். இளைய சகோதரர் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். ராகு உங்களின் ராசியை பார்வை இடுவதால் மறைமுகமான உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.
சனி அர்த்தாஷ்டம சனியாக இருந்தாலும் உங்களின் ராசிநாதனின் வீடு என்பதாலும் உச்ச குரு பார்வைகளுக்கு இருப்பதால் சனியால் கெடுபலன்கள் இருக்காது. சனி கொடுத்தால் யார் தடுப்பார்? என்பது போல வாகன வசதி, சொந்த வீடு கனவுகள் நிறைவேறுவதற்கு முயற்சி எடுத்தால் நல்ல பலன் கிடைக்க பெறுவீர்கள். தாயார் உடல் நிலை சரியாகி மீண்டும் மருத்துவ செலவுகள் உண்டாக வாய்ப்பு அமையும்.
தாயாரின் உடல்நலனை போன பாதுகாப்பது நல்லது. பஞ்சம ஸ்தானாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பதும் ராசிநாதன் குருவை பார்வை இடுவது உங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் செய்யும் தொழில் மேன்மை அடைவதற்கும் எதுவாக அமையும்.
உங்களின் யோகாதிபதி சூரியன் ஆறாமிடத்தில் அமர்வதும் விரைய ஸ்தானத்தில் சந்திரன் மீது பார்வை இடுவதும் யோக பலன்களை தரும். எதிர்பாராத நற்பலன்களை பெறுவீர்கள். அரசு பணியிலிருந்து வருவர்களுக்கு அதிகாரிகளில் நெருக்கடிகள் குறைத்து வளம் பெறுவீர்கள். செய்யும் தொழிலை தெய்வமாக ஏற்று செயல்படுவீர்கள். அரசியலிலும் உங்களின் செல்வாக்கு மேன்மை அமையும். தனிப்பட்ட உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். உரிமையுடன் உங்களின் பேச்சும், வன்மையும் சிறந்து விளங்கும். ஏழாமிடத்தில் புதன் ஆட்சி பெற்று சுக்கரனுடன் இணைவு பெற்று ராசியை பார்வை இடுவது தைரியமும், தெம்பும் வைராக்கியமாக காரியத்தை செயல்படுத்துவீர்கள்.
அட்டம ஸ்தானத்தில் குரு அமர்வதால் கொடுக்கல், வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பிணையமிடுவதை தவிர்ப்பது நல்லது, புத்திர, புத்திரிகளின் கல்விக்காக செலவு செய்ய வேண்டி வரும். அதற்காக சிலருக்கு கடன்படும் நிலை உண்டாகும். உயர்கல்வி பயில மாணவர்களுக்கு வாய்ப்பு அமையும். உச்ச குருவாக இருந்தாலும் அட்டம ஸ்தானத்தில் இருப்பதால் உங்களின் ராசிநாதன் என்பதால் கெடுபலன்கள் குறையும். பாக்கிய ஸ்தானத்தில் கேது அமர்ந்து லாப ஸ்தானத்தை பார்வை இடுவது செய்யும் தொழில் லாப கரமான சூழ்நிலை அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியின் போது சிறு சிறு தவறுகள் நடக்க வாய்ப்பு அமையும் என்பதால் கவனம் பணி செய்வது நல்லது. பொது வாழ்வில் இனி உங்களின் செல்வாக்கு பெருகும். எதை பற்றியும் கவலைபடாமல் உங்களின் பணியை சிறப்பாக செய்வீர்கள். கொடுத்ததை திருப்பி, கேட்டால் பகையாகிவிடுமோ என்று நினைக்காமல் கொடுத்த இடத்தில் கேட்டு வாங்கி கொள்வது நல்லது. பாதுகாப்பு கருதி நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். கலைத்துறை யினருக்கு முன்பைவிட சிறப்பான வளர்ச்சி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், ஓரஞ்சு, வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன், வெள்ளி, செவ்வாய்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
17-06-2026 புதன் கிழமை பகல் 12.25 முதல் 19-06-2026 வெள்ளிக்கிழமை பகல் 3.56 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்திக்கு மூன்று நெய் தீபம் ஏற்றி எலுமிச்சை சாதம் வைத்து வேண்டிக் கொள்ள தடைகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். செய்யும் தொழிலில் பிரச்சனையின்றி நலம் பெறுவீர்கள்.
10. மகரம்
வளமான சூழ்நிலையை உருவாக்க தொடர்ந்து பாடுபடும் மகர ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிநாதன் மூன்றில் அமர்ந்து பாக்கியஸ்தானத்தை பார்வை இடுவதும் குரு பார்வை ராசிக்கு அமைவதும் உங்களின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும். ஒவ்வொரு காரியமும் தொடர்ந்து சிறப்புடன் அமைய வெற்றி பாதையை நோக்கி பயணம் செய்வீர்கள். நேர்மையே உங்களின் வாழ்வில் சிறப்பான திறவு கோலாக அமையும். கெடுபலன்கள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.
உங்களின் ராசிக்கு ராகு இரண்டாமிடத்தில் அமர்ந்திருப்பது தன ஸ்தானம் பலம் பெற்று எதிரிபாராத பொருளாதார வளர்ச்சியை பெறுவீர்கள். வயதான தாத்தா பாட்டிகளுக்கு உடல் நல குறைவு வர வாய்ப்புண்டு. அவர்களை நன்றாக கவனித்துக் கொள்வது நல்லது.
உங்களின் ராசிநாதன் சனி மூன்றாமிடத்தில் அமர்ந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்வை இடுவது மனவலிமையும், தைரியமும் உண்டாகும். குரு பார்வை சனிக்கு இருப்பது இன்னும் பலமாக அமையும். குறுகிய கால முதலீடுகளில் தொழில் செய்து நல்ல வளம் பெறுவீர்கள். ஏழாமிடத்து அதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது இன்னும் சிறப்பான பலனை தரும். சனி கொடுத்தால் யார் தடுப்பார்?.
சனி இனி உங்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றுத்தை தருவார். சுய தொழில் செய்பவருக்கு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவருக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். காலத்தையும், நேரத்தையும் நிர்ணம் செய்து அதற்கு தகுந்தபடி செயல்படுவீர்கள். உங்களின் முயற்சிக்கு நல்லபலன் கிடைக்கும். உழைப்பிற்கு எப்பொழுதும் முக்கியத்துவம் தருவீர்கள்.
சுகஸ்தானாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவது உங்களின் செய்யும் தொழில் சிறப்பாக அமையும். உங்கள் யோகாதிபதி ஆறாமிடத்தில் இருந்தாலும் பண பரஸ்தானம் என்பதால் தொழில் நன்றாக இருக்கும். சமயத்தில் எதையும் சாதிக்கும் மனபலம் உண்டாகும். உடல் நலனில் மேன்மை உண்டாகும். தொழிலாளர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டு செயல்படுவீர்கள்.
அவர்களின் குறைகளை களைய வேண்டிய உதவிகளை செய்வீர்கள். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவதுடன் கிடைக்கும். வருவாயில் சலுகைப் பெற்று தருவதில் அக்கறை கொண்டு செயல்படுவீர்கள். ஒவ்வொருவரிடம் நீங்கள் முக மலர்ச்சியுடன் பழகும் போது உங்களின் பேச்சின் தன்மை சிறப்பாக அமையும். கிடைத்ததை வைத்த வாழ பழகி கொள்வீர்கள். பஞ்சம ஸ்தானத்தில் சூரியன் அமர்ந்திருப்பது சனி பார்வை சூரியனுக்கு அமைவது தந்தை -மகன் உறவு பாதிக்கும். புத்திர தோசம் இருப்பவர்கள் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. அதற்கான காலமாக அமையும்.
சத்ரு ஸ்தானாதிபதி ஆட்சி பெற்று விரைய ஸ்தானத்தை பார்வை இடுவது செய்யும் தொழிலில் நஷ்டம் பெறாமல் அமையும். மேலும் உங்களின் யோகாதிபதி சுக்கிரனுடன் இணைவு பெறுவதால் எல்லாம் சுபமாக அமையும். உறவுகளை புதுப்பித்து கொள்வீர்கள்.
கேட்டது கிடைக்கும். கொடுத்தது விரைவில் வரும் நினைத்ததை அடைவீர்கள். குரு ஏழாமிடத்தில் உச்சம் பெற்று ராசியை பார்வை இடுவது உங்களின் பலம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் நல்ல பலன் கிடைக்கும். தங்க நகை வாங்கும் வாய்ப்பு அமையும். வங்கி கடன் வசதி அமையும். திருமணம் ஆகாதவருக்கு விரைவில் திருமணம் நடக்கும். காரிய அனுகூலமாக அமையும். செய்ததை சொல்லி காட்டமாட்டீர்கள். பிறருக்கு தெரியாமல் உதவி செய்ய வேண்டுமென்று நினைப்பீர்கள். எந்த உதவியையும். மற்றவர்களிடமிருநது எதிர்பார்த்து இருக்காமல் தானே செயல்பட நல்லதையே நினைத்து நன்மை அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், மஞ்சள், ஓரஞ்சு.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்கிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
சனி, வியாழன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
19-06-2026 வெள்ளி மாலை 03.57 முதல் 21-06-2026 ஞாயிறு இரவு 09.16 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
அமாவாசை அன்று பித்ருகளுக்கு செய்ய வேண்டிய கர்ம காரியம் தவறாமல் செய்வது நல்லது. ஞாயிறு மாலை 04.30 - 06-00 ராகு காலத்தில் பைரவருக்கு ஐந்து நல்லெண்ணெய் தீபமேற்றி வேண்டிக் கொள்ள உங்களின் சகல காரியமும் சிறப்பாக அமையும்.
11. கும்பம்
கொண்ட கொள்கையை செயல்படுத்த விடாமல் துடிக்கும் கும்ப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்ந்து லாப ஸ்தானத்தை பார்வை இடுவது உங்களின் வாழ்க்கை சூழ்நிலை சிறப்பாக அமையும். குடும்ப சனியாக இருந்தாலும் குரு பார்வை படுவதால் பாதிப்புகள் எதுவும் வராது. அரசியலிலும், உத்தியோகத்திலும் உங்களின் செல்வாக்கு மேலோங்கும். எடுத்த காரியத்தை முடிக்கும். வரையிலும் விடாமுயற்சி இருக்கும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள்.
ராசியில் ராகு அமர்ந்து சிந்தனைகளையும், யோசனைகளையும் மறக்க செய்வார். ஆக்கிரமிப்பு எண்ணம் இருக்கும். எதையாவது நினைத்து மனதை குழப்பி கொண்டே இருப்பீர்கள். இதுவரை குரு பார்வை இருந்தால் அதன் பாதிப்பை தெரியாமல் இயலாத இருப்பினும் ராசிநாதன் பலம் பெற்று இருப்பது உங்களுக்கு ராகுவால் வரும் கெடுபலன்கள் வராது தடுத்து விடுவார். தன ஸ்தானத்தில் சனி பகவான் அமர்வது குடும்பத்தில் பல்வேறு குழப்பம் உண்டாகும். நாம் பேசக்கூடாது என்று நினைத்தாலும் எதையாவது பேசி மாட்டிக்கொள்ள வேண்டிவரும்.
இருப்பினும் குரு பார்வை இருப்பதால் சில நேரம் இந்த சம்பவம் நடக்காமல் போகலாம். ராசிநாதனின் ஆசீர்வாதம் உங்களுக்கு தொடர்ந்து இருக்கும். மூன்றாமிடத்து செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பது நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியை தரும். சகோதர ஸ்தானத்தின் பலன் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் உதவி கிடைக்கும். நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள்.
சுகஸ்தானத்தில் சூரியன் அமர்வது உடல்நலனில் அக்கறையை எடுத்துக் கொள்ள வேண்டிவரும். உடலில் உஷ்ண கொப்புளங்கள் சிலருக்கு உண்டாகும். உறுதியுடனான மனநிலையில் சில காரியம் செய்ய துணிவீர்கள். செய்யும் தொழிலில் நேர்மையும், வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியும் உங்களின் லட்சியமாக கொண்டு விளங்குவீர்கள்.
பஞ்சம ஸ்தானாதிபதி புதனுடன் யோகாதிபதி சுக்கிரன் சோதனை காலங்களில் நீங்கள் எண்ணிய எண்ணங்களை செயல்படுத்தும் திறன் யோகாதிபதிக்கு உண்டு. யோகாதிபதியின் பார்வை லாப ஸ்தானத்தில் இருப்பதால் பொருளாதார வளம் கிடைக்க உதவியை செய்வார். ஆடம்பரமான வாழ்க்கை, சுகபோக வாழ்க்கை, தடையின்றி அமையும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள்.
ஆறாமிடத்து குரு தொழில் ஸ்தானத்தையும் விரைய ஸ்தானத்தையும் பார்வை இடுவது உங்களின் தொழில் சிறப்பாக அமையும். செய்யும் தொழிலை தடையின்றி நன்றாக நடக்கும்படி செய்வீர்கள். அன்றாடம் அழியும் தொழிலில் வியாபாரம் சிறப்பான அமையும். காய்கறி, முட்டை, மாமிசம், உணவுப் பண்டங்கள் விற்பனை நன்றாக இருக்கும். செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்து தொழில் செய்வீர்கள்.
தொழிலாளர்கள் பற்றாகுறையால் சில நேரம் தொழில் வரும். பின்பு சரியாகி விடும். உங்களின் தொழில் கடன் விரைவில் தீரும். ஏழாமிடத்து கேது சூரியன் செய்யும் வேலை செய்வார். கொடுத்த கடனை திருப்பி தருவீர்கள். நண்பர்களின் தொடர்புகளை குறைத்து கொள்வீர்கள். எல்லாவற்றிலும் உங்களின் செயல்களை கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு அவர்களின் சார்ந்த கலை பணிகள் சிறப்பாக அமையும். வரவுக்குள் செலவுகளை சுருக்கி கொள்வீர்கள். எதை செய்தாலும் அதில் ஒரு நியாயத்தை உருவாக்குவீர்கள். உங்களின் தொழில் ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருப்பதும் சூரியன் பார்வை பெறுவதும் தொழில் பலம் பெற்று வளம் பெறுவீர்கள். இம்மாதம் உங்களின் அனைத்து காரியமும் வெற்றியை பெற்று தரும். குறுகிய கால தொழில் நல்ல வளர்ச்சியை பெறுவதும். பொருளாதார மேன்மையும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், ஓரஞ்சு, வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
சனி, ஞாயிறு, வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
21-06-2026 ஞாயிறு இரவு 09.17 முதல் 24-06-2026 புதன் அதிகாலை 04-57 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை ராகு காலத்தில் 09.00 - 10.30 மணிக்குள் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு மிளகு 27 வெள்ளை துணியில் முடிந்து திரியாக்கி ஏற்றி வேண்டிக் கொள்ள சகல காரியமும் சிறப்பாக நடக்கும். பொருளாதார வளர்ச்சி கிடைக்கும். உடல்நலன் பெறும்.
12. மீனம்
அன்பும், அடக்கமும் கொண்ட மீன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்வை இடுவது சிறப்பான நல்ல பலனை பெற்று தரும். தனாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று பலம் பெறுவது. பொருளாதாரத்தில் வளர்ச்சி கொடுக்கும், செல்வம், செல்வாக்கு, வலிமை பெற்று விளங்குவீர்கள். செய்யும் தொழிலை மதித்து செயல்படுவீர்கள். நிச்சய பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் யாரையும் நம்பி செயல்படமாட்டீர்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்து செயல்படும் போது எல்லாம் நன்மையாக அமையும்.
ராசியில் ஜென்ம சனியாக அமர்ந்து மன அமைதியின்மையும் சிந்தனை செயல்களை முடக்கியும் வைத்திருப்பதால் யாரை நம்பி செயல்படுவது என குழப்பம் உண்டாகும். எதை செய்தாலும் இது முழுமை பெறுமா? அல்லது தடைபடுமா? என்ற குழப்பம் நீடிக்கும். சொந்த முயற்சிகளால் எதையும் சாதிக்க முடியும் என்று மனவலிமையை முதலில் நீங்கள் உணருங்கள். ஏனெனில் ராசிநாதன் உச்சம் பெற்று ராசியை பார்வை இடுவது எத்தகைய துன்பமும் எதுவும் செல்வதில்லை என்பதை உணர்ந்து மன வலிமையுடன் செயல்பட்டால் எல்லாம் ஜெயமாகும்.
நம்முடன் இருப்பவர் நண்பரோ, பங்கு தாரரோ நம்மை விட்டு சென்றால் நமக்கு என்ன ஆகுமென்று கவலையை விட்டு விட்டு தனித்து இயங்க முயற்சி செய்தால்.. எல்லாம் ஜெயமாகும். அதுபோல தன ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பது உங்களுக்கு முழுபலனும் கிடைக்கும். வாரா கடன் வசூல் ஆவதும். வர வேண்டிய பொருள் தேடி வருவது போன்ற நல்ல பலன்கள் வந்து சேரும். பூமி சார்ந்த வீடு, மனை, பொருள் விற்பனை மந்த நிலை நீங்கி விரைவில் விற்று கடனைத் தீர்த்துக் கொள்வீர்கள். அதற்கான உங்களின் செயல்கள் வெற்றியை தரும்.
முயற்சி ஸ்தானத்தில் சூரியன் அமர்ந்திருப்பது நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு பக்கபலமாக வெற்றியை பெற்று தருவார். மனதின் பலவீனமே உங்களை செயல்படவிடாமல் தடுக்கிறது என்பதை உணர்ந்தாலே… நீங்கள் மீண்டும் செயல்பட துவங்குவீர்கள். சுகஸ்தானத்தில் புதன் ஆட்சி பெற்று இருப்பதும் சுக்கிரன் இணைவு பெறுவதும் வாகன வசதிகளையும், வேண்டிய பொருட்களை வாங்கும் சக்தியும் கிடைக்கும். தாயாருக்கு உடல்நல குறைவு ஏற்படும் போது உடன் இருந்து பார்த்துக் கொள்வீர்கள்.
சிலருக்கு கர்மம் செய்யும் சூழ்நிலை அமையும். பஞ்சம ஸ்தானத்தில் குரு உச்சம் பெற்ற ராசியை பார்ப்பதும் பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதும் சிறப்பான நற்பலன்களை தருவார். நீங்கள் எதிர்பார்த்த காரியம் கைகூடும். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் கிட்டும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு சில சோதனைகள் வரும். உடன் பங்குதாரர் சனி செயல்பட நினைக்கும் போது வருத்தம் உண்டாகும் என்றாலும் நீங்கள் உள் மனதில் தைரியத்தை வரவழைத்து செயலில் வெற்றி காண்பீர்கள்.
குரு பார்வை லாப ஸ்தானத்திலும் படுவதால் இன்னும் உங்களுக்கு ஆறுதலை பெற்று தரும். குருவின் நீச வீடு என்றாலும் சனியின் வீடு என்பதால் குரு அருள் திறம்பட அமையும். குரு பார்வையின் காலம் வரையிலும் நல்ல பலன் கிட்டும். ஆறாமிட கேது உங்களின் அடையாளம் நீண்ட கால தடைக்கு முற்று புள்ளியாக அமைவார். கண்ணை திறந்து எதிரியை அடையாளம் காண்பீர்கள்.
அவரின் மூலம் இதுவரை பட்ட கஷ்டங்களை உணர்ந்து, அதிலிருந்து விடுதலை பெற முடிவு செய்வீர்கள். பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் அமர்வது நீச வீடாக இருந்து ராசிநாதன் குரு பார்வை பெறுவதால் நீச பங்க ராஜயோக பலன்கள் அடைவீர்கள். ஏழரை சனி காலத்தில் கூட ராஜ யோக பலன்கள் உங்களை அடையும் என்பதால் எதையும் யோசிக்காமல் துணிச்சலுடன் செயல்படுவது மிக சிறந்த நற்பலனை பெற்று தரும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், நீலம், ஓரஞ்சு.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடகிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன், திங்கள், செவ்வாய்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
24-06-2026 புதன் அதிகாலை 04.58 முதல் 26-06-2026 வெள்ளிகிழமை மாலை 03.07 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு மாலை ராகு காலத்தில் 04.30 - 06.00 மணிக்குள் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீப ஏற்றி வேண்டிக் கொள்ளவும், வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியரை வணங்கி சிவப்பு நிற பூ வைத்து நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்ள மன துணிவும் செயலில் திறமையும் உண்டாகும்.
கணித்தவர்:
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM