இந்தியாவின் கோயம்புத்தூருக்கு சட்டவிரோதமாக தங்கத்தை கடத்திச்சென்ற பெண்ணொருவரை கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

குறித்த பெண்ணிடமிருந்து ரூபா 15 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான 314.5 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பெண் வத்தளைப் பகுதியைச் சேர்ந்தவரென்றும் அவர் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.