ஃபோர்னியர் கேங்க்ரீன் எனும் பாதிப்பிற்குரிய நவீன சத்திர சிகிச்சை

Published By: Digital Desk 2

30 May, 2026 | 05:09 PM
image

எம்மில் சிலருக்கு அவர்களுடைய பிறப்புறுப்பில் சில சங்கடங்களும் , அசௌகரியங்களும் ஏற்பட்டிருப்பதை உணர்வர். உடனடியாக பாரிய பாதிப்பு ஏதோ ஏற்பட்டிருப்பதாக அச்சம் கொண்டு உடனடியாக வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவார்கள். அவர்களில் சிலருக்கு மிக அரிதாக ஏற்படக்கூடிய போர்னியர் கேங்க்ரீன் எனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும். இதற்கு தற்போது ஃபிளாப் சர்ஜேரி எனும் நவீன சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்களை விட ஆண்களை அதிக அளவில் பாதிக்கும் இத்தகைய போர்னியர் கேங்க்ரீன் எனும் பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும்.. எப்போது வேண்டுமானாலும்.. ஏற்படக்கூடும். பெரும்பாலும் காயங்கள் காரணமாக இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

பொதுவாக இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருந்தால்.. அவர்களுடைய பிறப்புறுப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீக்கம் அல்லது இயல்புக்கு மாறான மென்மையான உணர்வு அல்லது நிற மாற்றம் ஆகியவை ஏற்பட்டிருக்கும். இதனை அறிகுறியாக அவதானித்து, உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று வைத்தியர்களை சந்திக்க வேண்டும்.

அதிலும் நீரிழிவு நோயாளிகள் உடனடியாக வைத்தியர்களை சந்திக்க வேண்டும். சிலருக்கு காய்ச்சல், அதீத குளிர் நடுக்கம், நீர்ச்சத்து குறைபாடு, சோம்பல் தன்மை, குமட்டல், வாந்தி , அடிவயிற்று பகுதியில் வலி,  பிறப்புறுப்பு பகுதியில் துர்நாற்றம்.. ஆகியவையும் இதன் அறிகுறியாக அவதானிக்கலாம்.

போர்னியர் கேங்க்ரீன் என்பது உங்களுடைய பிறப்புறுப்பு அல்லது அதை சுற்றியுள்ள தசை பகுதிகளில் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான அரிய பாக்டீரியா தொற்று பாதிப்பாகும். இதனை சதை உண்ணும் நோய் என்றும் குறிப்பிடுவார்கள்

. இத்தகைய பாக்டீரியா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தால்... அவை மென்மையான திசுக்களை அழித்துவிடும். இதன் காரணமாக இத்தகைய பாதிப்பினை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை பெற வேண்டியதிருக்கும்.

சிலருக்கு இத்தகைய பாதிப்பின் அறிகுறி என்பது பிறப்புறுப்புகள் மற்றும் மலவாய் பகுதியில் ஏற்படும் திடீர் வலியாகவும் உருவெடுக்கும். சிலருக்கு இந்த வலி திடீரென கடுமையாகிவிடும். அவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டியதிருக்கும். வைத்தியர்கள் இவர்களுக்கு சில பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொண்டு, ஃப்ளாப் சர்ஜேரி எனும் நவீன சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் வழங்குவர்.

இத்தகைய பாதிப்பு ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும்.. அவர்களில் உடற்பருமன் உள்ளவர்களுக்கும்.. இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம். புகைப்பிடித்தல், புகையிலை பொருட்கள் பாவனை, சில பிரத்யேக மருந்தியல் சிகிச்சையின் பக்கவிளைவுகள் , காயம்.. ஆகிய பல காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படும். 

இவற்றை உரிய தருணத்தில் கவனித்து சிகிச்சை அளிக்காவிட்டால்... சிறுநீரக செயலிழப்பு, ரத்த நாள அடைப்பு ,இதய செயலிழப்பு, பக்கவாதம், சுவாசத்திணறல்... போன்ற உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை உண்டாக்கி விடும். இதன் காரணமாக இத்தகைய போர்னியர் கேங்க்ரின் பாதிப்பு ஏற்பட்டிருந்தால்.... உடனடியாக அவதானித்து, அதற்கு சிகிச்சை பெற வேண்டும் என வைத்தியர்கள் வலியுறுத்துகிறார்கள்.

வைத்தியர் சிராயு

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஃபோகல் டிஸ்டோனியா எனும் நரம்பியல் இயக்க...

2026-07-17 16:09:06
news-image

பெம்பிகஸ் வல்காரிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2026-07-15 15:09:00
news-image

விரை வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-14 17:28:48
news-image

கோரொய்ட் பிளெக்ஸஸ் சிஸ்ட் எனும் சிசுவின்...

2026-07-13 17:19:36
news-image

மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை-...

2026-07-11 17:00:24
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11
news-image

ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண்...

2026-07-04 15:11:03
news-image

ஓலெக்ரானன் எலும்பு முறிவுக்கான நவீன சத்திர...

2026-07-03 17:26:41