தமிழர் தாய­கப்­ப­கு­தியில் முதற்­கட்­ட­மாக நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள 6ஆயிரம் பொருத்து வீட்­டுத்­திட்­டத்­திற்கு எதி­ராக மீளவும் உயர் நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.ஏ.சுமந்­திரன் இவ்­வாறு மீளவும் வழக்குத் தாக்கல் செய்­துள்ளார்.

சுமந்­திரன் தாக்கல் செய்­துள்ள மனுவில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, அமைச்­ச­ர­வையில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்­சர்கள், சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்வு, மற்றும் இந்து சமய அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மிநாதன், சட்­டமா அதிபர், ஆர்­சிலோன் மிட்டல் நிறு­வனம், ஆகியோர் பிர­தி­வா­தி­க­ளாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளனர்.

அத்­துடன் வடக்கு, கிழக்­கிற்கு பொருத்து வீட்­டுத்­திட்டம் சற்­றேனும் பொருத்­த­மில்லை. அங்­குள்ள கால­நி­லைக்கு இந்த வீட்­டுத்­திட்டம் பொருத்­த­மா­ன­தாக இல்லை. மேலும் 65 ஆயிரம் பொருத்து வீட்­டுத்­திட்­டத்தின் கேள்வி மனுக்­கோ­ரலின் அடிப்­படையில் முதற்­கட்­ட­மாக 6 ஆயிரம் பொருத்து வீடு­களை நிர்­மா­ணிப்­ப­தற்­காக அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ர­ம­ளித்­துள்­ளது.  

ஆகவே பொருத்து வீடு தொடர்­பாக எந்­த­வொரு நட­வ­டிக்­கையையும் முன்­னெ­டுப்­ப­தற்கு உயர் நீதி­மன்றம் உடன் தடை விதிக்க வேண்­டு­மென அம்­ம­னுவில் சுட்­டு­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

முன்­ன­தாக கடந்த ஜுலை மாதம் 13ஆம் திகதி பொருத்து வீட்­டுத்­திட்­டத்­திற்கு எதி­ராக எம்.ஏ.சுமந்­திரன், அமைச்சர் சுவா­மி­நாதன், ஆர்­சிலோன் மிட்டல் நிறு­வனம் மற்றும் சட்ட மா அதிபர் ஆகி­யோரை பிர­தி­வா­தி­க­ளாக குறிப்­பிட்டு வழக்கு தாக்கல் செய்­தி­ருந்தார். அவ்­வ­ழக்கு ஆகஸ்ட் 31ஆம் திகதி விசா­ர­ணைக்கு வந்­த­போது  அமைச்­ச­ரவை தீர்­மானம் மேற்­கொண்­டுள்­ளது. 

ஆகவே மனு­தா­ரரின் வழக்­கினை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என அமைச்சர் சுவா­மி­நாதன் தரப்பில் ஆஜரான ஜனா­தி பதி சட்­டத்­த­ரணி உபுல் ஜய­சூ­ரிய தலை­மை­யி­லான குழுவினர் வாதிட்டனர். இதனையடுத்து பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிராக மீளவும் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்ற உரிமத்தினை வைத்துக்கொண்டு அவ்வழக்கினை மீளப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.