சிங்கப்பூரில் நடைபெற்ற “தமிழர் திருநாள் 46”

Published By: Vishnu

29 May, 2026 | 11:32 PM
image

மே மாதம், 23 ஆம் திகதி சனிக்கிழமை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில், மாதவி இலக்கிய மன்றம் நடத்திய 46வது தமிழர் திருநாள் நடைபெற்றது. சமூகத் தலைவர்கள், தமிழ் அமைப்புத் தலைவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், மாணவர்கள் என அரங்கு நிறைந்த கூட்டம் காணப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அல்ஜூனிட் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் ஜெகதீஸ்வரன் ராஜூ PBM, மேனாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தமிழவேள் கோ சாரங்கபாணியால் தொடங்கப்பட்ட தமிழர் திருநாளை தொடர்ந்து மாதவி இலக்கிய மன்றம் நடத்தி வருவதைப் பெருமையாகக் குறிப்பிட்டு, மொழி, சமூகம் இரண்டிற்கும் முக்கியத்துவம் அளித்து புத்தாக்கச் சிந்தனையுடன் செயல்படவிருப்பதாக மாதவி இலக்கிய மன்றத் தலைவர் சித்ரா மெய்யப்பன் குறிப்பிட்டார்.

தமிழை மொழியாக மட்டும் பார்க்காமல் பண்பாட்டு அடையாளமாகவும், சமூகத்தை இணைக்கும் உயிர்கோடாகவும் தமிழார்வமுள்ள இளையர்களை உருவாக்கும் தளமாகவும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் தளமாகவும் மாதவி இலக்கிய மன்றம் செயல்படவிருப்பதாக அவர் கூறினார்.

நிகழ்ச்சி முறையாக, தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது. ‘மாதவி பொன் மயிலாள்' இலக்கிய, இசை நாடகம் ஷர்மிளா தீபன் இயக்கத்தில், தீபன் கணேஷ் இசையமைப்பில் மாதவியின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரித்தது. 12 வயதிற்குட்பட்ட மாணவர்கள் நாடகத்தில் நடித்தார்கள். அனைத்து மாணவர்களின் நடிப்பும் மிகவும் அற்புதமாக இருந்தது.

சிறப்பு விருந்தினர் ஜெகதீஸ்வரன் ராஜூ, நாடகம் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், மாணவர்களிடம் இலக்கியம் சென்றிருப்பதை அறிய முடிவதாகவும் கூறினார். மாதவி, கோவலனின் நடிப்பில் தான் ஈர்க்கப்பட்டதாகவும் கூறினார். இதுபோன்ற முயற்சிகள் தொடரவேண்டும் என்று மன்றத்தினரிடம் கேட்டுக்கொண்டார்.

மற்றொரு சிறப்பு விருந்தினரான இரா. தினகரன், நிகழ்ச்சி மிகவும் நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கூறினார். ஒரு பெண் தலைவராகவும், பெண் உறுப்பினர்கள் அதிகமாக இருக்கும் இந்த மன்றத்தின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருப்பதாகக் கூறினார். இலக்கியத்தை சிறுவர்களை வைத்து, நாடகமாக்கியதை  வெகுவாகப் பாராட்டினார்.

தமிழர் பேரவைத் தலைவர் பாண்டியன், அனைத்துத் தமிழமைப்புத் தலைவர்களும் சமூகத் தலைவர்களும் பொதுமக்களும் இதுபோன்ற நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வது புதிதாகப் பொறுப்பேற்று திறம்பட செயல்பட நினைக்கும் குழுவினருக்கு ஊக்கமாக இருக்கும் என்று கூறினார். தமிழர் பேரவையின் 75ஆம் ஆண்டு பவளவிழாவைப் பற்றி அறிவித்தார்.

மன்னை க. இராஜகோபாலன் தலைமையில் முத்தமிழிச் சோலை அங்கம் நடைபெற்றது. எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் ஸ்வர்ணலதா ஆவுடையப்பன் அவர்களும் இன்தமிழும் இன்னிசையும் என்ற தலைப்பில் மேனகா சேஷகுமார் அவர்களும் நற்றமிழும் நாடகமும் என்ற தலைப்பில் இராம்குமார் சந்தானமும் சிறப்பாகப் பேசிப், பாடி மக்களை மகிழ்வித்தனர்.

‘தமிழவேள் கோ சாரங்கபாணி’ விருது சிங்கையின் பிரபல முன்னோடி எழுத்தாளர் ம இளங்கண்ணன் அவர்களுக்கும் தன்னலமற்ற சேவை புரியும் பெண்ணுக்கான ‘மாதவி கண்ட மாதரசி’ விருதை திருவாட்டி வீரம்மாள் அவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது.

கடந்த மாதம் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. 

கடந்த ஈராண்டுகளாக மாதவி இலக்கிய மன்றம் நடத்தும் கட்டுரைப் பயிலரங்கில் கலந்து கொள்வது மிகுந்த பயனாக இருக்கிறது. இந்தாண்டு பரிசு பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெமேசேக் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் சுரேந்தர் கூறினார்.

இந்தாண்டு பரிசு பெறாவிட்டாலும் தான் கட்டுரைப் பயிலரங்கில் கலந்து கொண்டது தனது தேர்வுக்கு உதவியாக இருந்ததை மற்றொரு மாணவரான அதர்வா அஷோக் நினைவு கூர்ந்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் பங்குபெற்று நிச்சயமாகப் பரிசைப் பெறுவேன் என்றும் உறுதியாகக் கூறினார்.

இதுவே நாங்கள் நடத்தும் பயிலரங்கு மற்றும் போட்டியின் பலன் என்று துணைத்தலைவர் திருமதி சுகந்தி கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கலாநிதி அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையின்...

2026-06-11 19:01:53
news-image

மத்திய மாகாணத்தில் 14 பாடசாலைகளுக்கு புதிய...

2026-06-11 13:26:27
news-image

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக...

2026-06-11 12:28:50
news-image

"தகவலறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட...

2026-06-09 17:43:58
news-image

கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற...

2026-06-09 11:43:08
news-image

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் இருநாள் தென்னருவி...

2026-06-09 09:24:07
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் கல்விக் குடும்பத்தின் விசேட...

2026-06-09 08:37:12
news-image

எழுத்தாளர் சிவகௌரியின் ‘முத்துப்பரல்கள்’ ஹைக்கூ கவிதை...

2026-06-07 23:47:08
news-image

யாழ்ப்பாண இராசதானி சங்கிலியன் மன்னனின் சிரார்த்த...

2026-06-07 12:06:11
news-image

வாகரை கதிரவெளியில் பகலவன் கல்வி நிலையம்...

2026-06-05 21:03:05
news-image

நுவரெலியா சீதையம்மன் ஆலய திருக்கல்யாணம் வைபவத்தில்...

2026-06-03 19:04:59
news-image

இலங்கை கோபியோ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைக்கான...

2026-06-03 18:14:49