உயர்கல்வி கற்கும் ஒவ்வொருவருக்கும் அரசாங்க போட்டித் தேர்வு எழுதி, அதில் வெற்றி பெற்று அரசாங்கத்திற்காக பணியாற்ற வேண்டும் என்பதில் பெரு விருப்பம் கொண்டிருப்பார்கள்.
அரசாங்கப் பணியில் இணைந்தால் வாழ்க்கை முழுவதும் பணி பாதுகாப்பு- பொருளாதார தன்னிறைவு -சமூக மதிப்பு -என பல்வேறு வாழ்வியல் சார்ந்த விடயங்களுக்கு சாதகமாக இருப்பதால்... பெரும்பாலானவர்கள் அரசாங்க பணியை நேசிக்கிறார்கள்.
ஆனால் அது தற்போதைய சூழலில் கடினமானதாக மாற்றம் பெற்றிருக்கிறது. இத்தகைய சூழலில் அரசாங்க பணி மற்றும் அரசாங்கம் சார்ந்த ஒப்பந்தங்கள்- அரசாங்கம் சார்ந்த வேலைகள்- ஆகியவை விரைவாகவும், நேர்த்தியாகவும் நிறைவேற வேண்டும் என்றால்... அதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில பிரத்யேக வழிமுறைகளை குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : பித்தளை எனும் உலோகத்தாலான ஒரு கோப்பை , தர்ப்பை புல் அல்லது அருகம்புல்.
ஒவ்வொரு மாதமும் தவறாமல் வரும் வளர்பிறை ஞாயிற்றுக்கிழமையை தெரிவு செய்து கொள்ளுங்கள். அன்றைய திகதியில் சூரிய உதய தருணத்தில் எழுந்து நீராடி கிழக்கு திசை நோக்கி நின்று பித்தளை கோப்பையில் நீரை நிரப்பி அதில் சிறிதளவு தர்ப்பைப்புல் அல்லது அருகம்புல்லை வைத்து அந்த நீரை சூரியனுக்கு காண்பித்து இரண்டு நிமிடங்கள் வரை சூரியனின் மந்திரத்தை உங்களுக்கு பிடித்த மந்திரத்தை மனதில் தியானித்து உச்சரிக்க வேண்டும். பிறகு இரண்டு நிமிடங்கள் கழித்து அந்த நீரில் உங்களது முகத்தை பாருங்கள்.
மீண்டும் ஒரு முறை சூரிய பகவானை நினைத்து அவரது மந்திரத்தை ஒன்பது முறை உச்சாடனம் செய்யுங்கள். அதன் பிறகு அந்த பித்தளை கோப்பையில் உள்ள அருகம் புல் அல்லது தர்ப்பை புல்லை எடுத்து வைத்து விட்டு, அந்த நீரை அருந்தி விடுங்கள். இந்த வழிபாட்டை தொடர்ந்து 48 நாட்கள் வரை விடாது பின்பற்றுங்கள். அத்துடன் அரசு பணிக்கான போட்டி தேர்வுக்கான பிரத்யேக பயிற்சியை உறுதியுடனும், நம்பிக்கையுடனும் கடைப்பிடியுங்கள். அதனை தொடர்ந்து வரும் போட்டித் தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெற்று அரசாங்க ஊழியராக நியமனம் செய்யப்படுவதை அனுபவத்தில் காணலாம் அல்லது அரசாங்கத் தொடர்பான ஒப்பந்தங்கள், பணிகள் ஆகியவற்றில் வெற்றி கிடைப்பதையும் அனுபவத்தில் காண முடியும்.
இந்நிலையில் தொடர்ந்து 48 நாட்களாக சேகரித்து வரும் அருகம்புல் அல்லது தர்ப்பை புல்லை சிறிது பச்சை கற்பூரம் வைத்து எரித்து பஸ்பம் ஆக்கி ,அதனை தேங்காய் எண்ணெயில் குழைத்து ஒவ்வொரு போட்டித் தேர்வு எழுதும் போதும் அல்லது அரசாங்கம் தொடர்பான பிரமுகர்களை சந்திக்கும் போதும் நெற்றியில் திலகமாக இட்டுச் சென்றால்.. உங்களுடைய முயற்சியில் வெற்றி கிட்டும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM