சர்க்கரை நோயாளிகளுக்காக அறிமுகமாகி இருக்கும் நவீன சிகிச்சை- டயபெடிக் ஃபுட் லிம்ப் சால்வேஜ்

Published By: Digital Desk 2

29 May, 2026 | 06:11 PM
image

இன்றைய சூழலில் இலங்கை- இந்தியா- பாகிஸ்தான் -வங்காளதேசம் -உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் இரண்டு மடங்காக உயர்ந்து வருகிறது என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு இருந்தாலும் ஆனால் மக்கள் அதனை முறையாகவும் முழுமையாகவும் கடைப்பிடிப்பதில்லை.

இதனால் நீரழிவு நோய் பாதிப்பிற்கு முகம் கொடுக்கிறார்கள். இந்நிலையில் சர்க்கரை நோயாளிகளில் பத்தில் ஒருவருக்கு கட்டுப்படுத்தப்படாத ரத்த சர்க்கரையின் காரணமாக பாதங்களில் புண் ஏற்படுகிறது. இவை கடினமாகி அசௌகரியங்களையும், சங்கடங்களையும் தருகிறது. இந்நிலையில் நீரிழிவால் பாதங்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை அகற்றுவதற்கு டயபெடிக் ஃபுட் லிம்ப் சால்வேஜ் எனும் நவீன ஒருங்கிணைந்த சிகிச்சை அறிமுகமாகி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோயின் காரணமாக எம்முடைய பாதங்களில் புண் ஏற்படுகிறது. இவை திறந்த நிலை காயங்களாகவோ அல்லது புண்களாகவோ ஏற்படும். புதிய காலணிகள்- காலில் ஏற்படும் சிறு சிராய்ப்பு போன்ற பல்வேறு காரணங்களால் காலில் ஏற்பட்டிருக்கும் புண் அதிகமாகும். கட்டுப்படுத்தப்படாத ரத்த சர்க்கரையின் உயர்வு அல்லது சம சீரற்ற நிலையின் காரணமாக எம்முடைய தோல் திசுக்களின் குணப்படுத்தும் செயல்முறை தாமதமாகிறது. அத்துடன் முறையற்ற நரம்பு இயக்கத்தின் காரணமாகவும்...

இரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்பட்டு, குறுகுவதால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் காயங்கள் , கொப்புளங்கள் ஆகியவற்றிற்கு மருந்தியல் சிகிச்சை மூலம் பலன் கிடைக்காமல் தாமதமாகிறது. 

சிலருக்கு இத்தகைய நிலையில் முழுமையான சிகிச்சை பெறாவிட்டால்.. அவை தொற்று பாதிப்பாகவும் மாற்றம் பெற்று பாரிய சிக்கலுக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக சிலருக்கு உறுப்புகளில் ஒரு பகுதியை நீக்க வேண்டியதிருக்கும். ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் டயபெடிக் ஃபுட் லிம்ப் சால்வேஜ் நவீன ஒருங்கிணைந்த சிகிச்சைகள் மூலம்  ரத்த ஓட்ட சீரமைப்பு , புண்கள் குணமடைவதற்கான தீவிர சிகிச்சை , தொற்று பாதிப்பு பரவாமல் இருப்பதற்கான சிகிச்சை..

ஆகியவற்றை மேற்கொண்டு, இதற்கு நிவாரணம் வழங்குகிறார்கள். இத்தகைய நவீன சிகிச்சை காரணமாக நீரிழிவு புண் காரணமாக பாதங்களில் உள்ள உறுப்புகள் அகற்றப்படுவதற்கான சக்திர சிகிச்சை தவிர்க்கப்படுகிறது

இத்தகைய சிகிச்சையை பின்பற்றும் தருணங்களிலும் சிகிச்சைக்கு பிறகும் உங்களுடைய இரத்த சர்க்கரையின் அளவில் கட்டுப்பாட்டை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

வைத்தியர் குப்தா

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஃபோகல் டிஸ்டோனியா எனும் நரம்பியல் இயக்க...

2026-07-17 16:09:06
news-image

பெம்பிகஸ் வல்காரிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2026-07-15 15:09:00
news-image

விரை வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-14 17:28:48
news-image

கோரொய்ட் பிளெக்ஸஸ் சிஸ்ட் எனும் சிசுவின்...

2026-07-13 17:19:36
news-image

மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை-...

2026-07-11 17:00:24
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11
news-image

ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண்...

2026-07-04 15:11:03
news-image

ஓலெக்ரானன் எலும்பு முறிவுக்கான நவீன சத்திர...

2026-07-03 17:26:41