முன்னாள் ஜனா­தி­ப­தியை சந்­திக்க சென்ற­தற்­கான காரணம் என்ன என நீதிவான் சந்­தேக நப­ரிடம் கேட்டதற்கு ' அது தனிப்­பட்ட விடயம். பரம இர­க­சியம். அதனை அவ­ரிடம் மட்­டுமே சொல்ல முடியும்' என நீதி­வா­னுக்கு சந்தேக நபர் பதி­ல­ளித்துள்ளார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் கொழும்பு - விஜே­ராம வீட்­டுக்குள் கத்­தி­யுடன் பலாத்­கா­ர­மாக உள் நுழைய முயன்ற இளை­ஞரை எதிர்­வரும் 6 ஆம் திக­தி­ வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க கொழும்பு பிர­தான நீதிவான் லால் ரண­சிங்க பண்­டார நேற்று உத்­தர­விட்டார். 

பலாங்­கொ­டையை சேர்ந்த 24 வய­து­டைய  ஜயமால் வீர­சிங்க எனும் இளை­ஞ­ரையே இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்­தர­விட்டார்.

நேற்று முன் தினம் கொழும்பு விஜே­ராம - பகு­தியில் உள்ள முன்னாள் ஜன­ாதி­ப­தியின் வீட்­டுக்குள் இளைஞர் ஒருவர் உள் நுழைய முற்­பட்­டுள்ளார். இதன்­போது அங்­கி­ருந்த பாது­காப்பு பிரி­வினர் அவரை தடுத்து விசா­ரித்­துள்­ளனர். தனக்கு மஹிந்த ராஜ­பக்ஷ்வை சந்­திக்க வேண்டும் எனவும் இல்­லையேல் அவ்­வி­டத்­தி­லேயே தற்­கொலை செய்­து­கொள்ளப் போவ­தா­கவும் கத்தி ஒன்­றினைக் காட்டி அவ்­வி­ளைஞன் மிரட்­டி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து பாது­கா­வ­லர்கள் அந்த இளை­ஞரை மடக்கிப் பிடித்து கத்­தி­யையும் மீட்டு கறு­வாத்­தோட்டம் பொலி­ஸா­ரிடம் சந்­தேக நபரை ஒப்­ப­டைத்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து சந்­தேக நபர் நேற்று கொழும்பு பிர­தான நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்பட்டார்.

இதன்­போது, முன்னாள் ஜனா­தி­ப­தியை சந்­திக்க சென்ற­தற்­கான காரணம் என்ன என நீதிவான் ரண­சிங்க பண்­டார சந்­தேக நப­ரிடம் கேட்டார்.

' அது தனிப்­பட்ட விடயம். பரம இர­க­சியம். அதனை அவ­ரிடம் மட்­டுமே சொல்ல முடியும்' என நீதி­வா­னுக்கு சந்தேக நபர் பதி­ல­ளித்தார்.

 இத­னை­ய­டுத்து சந்­தேக நபரை எதிர்­வரும் 6 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­தரவிட்ட நீதிவான், சந்தேக நபரை மனோ தத்துவ  வைத்தியர் ஒருவர் முன்னிலையில் ஆஜர்செய்து அறிக்கை சமர்பிக்க சிறைச்சாலை அத்தியட்சருக்கு உத்தரவிட்டார்.