ஐ.நா.வில் வடகொரியாவை மிரட்டும் பாணியில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பேசியதையடுத்து, அதற்குப் பரிசாக பசிபிக் பிராந்தியத்தின் மேலாக ஹைட்ரஜன் குண்டு ஒன்றைப் பரிசோதிக்கப் போவதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றிக் கூறியிருக்கும் வடகொரிய வெளிநாட்டு அமைச்சர் ரி யோங் ஹோ, தாம் நடத்தவிருக்கும் ஹைட்ரஜன் தாக்குதல், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரமாண்டமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

வழக்கத்துக்கு மாறாக தாக்குதல் குறித்து கிம் வெளிப்படையாகத் தெரிவித்திருப்பது சந்தேகத்தைக் கிளப்புவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

முன்னதாக, கிம் குறித்து ட்ரம்ப் பதிவு செய்திருந்த ட்வீட்டில், ‘வடகொரியாவின் கிம் ஜோங் உன் ஒரு பைத்தியக்காரர். வறுமையில் வாடும் தன் மக்களைக் கொன்று குவிக்கும் அவர், இதுவரை இல்லாத அளவுக்கு சோதினைக்கு உள்ளாக்கப்படுவார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுபற்றித் தெரிவித்த கிம், ‘ட்ரம்ப் ஒரு மனநிலை குழம்பிய கிழவர்’ என்று குறிப்பிட்டிருந்தார்.