கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் சர்வதேச அருங்காட்சியக தின நிகழ்வு

Published By: Digital Desk 2

28 May, 2026 | 06:53 PM
image

(நமது நிருபர்)

சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, வரலாற்றிலேயே முதல் முறையாக கொழும்பு தேசிய அருங்காட்சியகத்துடன் இணைந்த கூட்டு கலாசார நிகழ்ச்சி கடந்த மே 18ஆம் திகதி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரிட்டிஷ் காலனித்துவக் கட்டட வளாகத்தில் இந்தத் தனித்துவமான பண்பாட்டுச் சங்கமம் அரங்கேறியது.

இந்த விழாவில் இலங்கைக்கான ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கலாசார தூதரகப் பிரிவுகள் ஒன்றிணைந்து தத்தமது பாரம்பரிய கலை வடிவங்களையும் கலாசாரப் பெருமைகளையும் காட்சிப்படுத்தியதுடன், உள்நாட்டு மத மற்றும் பண்பாட்டு அமைப்புகளும் இவர்களுடன் கைகோர்த்து விழாவை சிறப்பித்தன.

இந்நிகழ்வில் ரஷ்ய தூதரகத்தின் கீழ் இயங்கும் கலைப் பள்ளிகளின் பங்களிப்புகள் பார்வையாளர்களின் பலத்த கைதட்டலையும் பாராட்டுக்களையும் பெற்றன.

குறிப்பாக, ரஷ்ய பாலே மற்றும் நடனப் பள்ளியின் மூத்த பயிற்றுவிப்பாளர் ஷினாலி டயஸின் நெறியாள்கையிலும், ரஷ்ய தூதரக கலாசார அதிகாரி  சாந்தி அளுவிஹாரேவின் ஒருங்கிணைப்பிலும் வடிவமைக்கப்பட்ட பாரம்பரிய 'குவாட்ரில்' நடனத்தை மாணவர்கள் மேடையில் அரங்கேற்றினர். ரஷ்யாவின் புகழ்பெற்ற 'கெஷல்' நீல-வெள்ளை பாரம்பரிய கலைவடிவத்தை லிக்கும் ஆடைகளை அணிந்து அவர்கள் ஆடிய நடனம் விழாவின் முக்கிய சிறப்பம்சமாக அமைந்தது.

அத்தோடு, ரஷ்ய இசைப் பள்ளியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தூதரகப் பள்ளி மாணவிகளான மாஷா மற்றும் சாஷா ஆகிய இருவரும் இணைந்து, உலகளாவிய ஒற்றுமையை வலியுறுத்தும் "சன்னி சேர்க்கிள்" என்ற புகழ்பெற்ற பாடலை பாடி அரங்கில் இருந்தோரை வெகுவாகக் கவர்ந்தனர்.

அருங்காட்சியகங்கள் என்பவை வெறும் வரலாற்றைப் பாதுகாக்கும் காப்பகங்கள் மட்டுமல்ல, அவை உலக நாடுகளுக்கிடையிலான கலாசார உரையாடல்கள், நட்பு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வளர்க்கும் உயிருள்ள தளங்கள் என்பதை இந்த சர்வதேச அருங்காட்சியக தினக் கொண்டாட்டம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.

 பிரதிப

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கலாநிதி அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையின்...

2026-06-11 19:01:53
news-image

மத்திய மாகாணத்தில் 14 பாடசாலைகளுக்கு புதிய...

2026-06-11 13:26:27
news-image

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக...

2026-06-11 12:28:50
news-image

"தகவலறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட...

2026-06-09 17:43:58
news-image

கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற...

2026-06-09 11:43:08
news-image

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் இருநாள் தென்னருவி...

2026-06-09 09:24:07
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் கல்விக் குடும்பத்தின் விசேட...

2026-06-09 08:37:12
news-image

எழுத்தாளர் சிவகௌரியின் ‘முத்துப்பரல்கள்’ ஹைக்கூ கவிதை...

2026-06-07 23:47:08
news-image

யாழ்ப்பாண இராசதானி சங்கிலியன் மன்னனின் சிரார்த்த...

2026-06-07 12:06:11
news-image

வாகரை கதிரவெளியில் பகலவன் கல்வி நிலையம்...

2026-06-05 21:03:05
news-image

நுவரெலியா சீதையம்மன் ஆலய திருக்கல்யாணம் வைபவத்தில்...

2026-06-03 19:04:59
news-image

இலங்கை கோபியோ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைக்கான...

2026-06-03 18:14:49