கால் ஆணி பாதிப்பிற்குரிய நவீன நிவாரண சிகிச்சை

29 May, 2026 | 11:52 AM
image

எம்மில் சிலர் இயல்பான அளவைவிட கூடுதலாக நாளாந்தம் காலணிகளை அணியாமல் கால்நடையாகவே நிறைய இடங்களுக்கு பயணிப்பார்கள். வேறு சில பெண்களும், பெண்மணிகளும் தங்களுடைய உடல்வாகிற்கு ஏற்றதாக இல்லை என்றாலும் நாகரீகம் கருதி குதியுயர் காலணியை அணிந்து ஒய்யாரமாக நடந்து மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தாலும்.. அவர்களுடைய கால்களுக்கும் கால் ஆணி எனும் பாதிப்பு ஏற்படும். இத்தகைய பாதிப்பிற்கு தற்போது நவீன நிவாரண சிகிச்சைகள் அறிமுகம் ஆகி பலன் அளித்து வருகிறது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

எம்மில் சிலருக்கு பாதங்களில் குறிப்பாக குதிக்கால் - பாதத்தின் முற்பகுதி- விரல்கள் -ஆகியவற்றில் கால் ஆணி பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தான் அதன் வலியும் , வீரியமும் புரியும். இத்தகைய இடங்களில் உள்ள தோல்... இயல்பான மென்மைத் தன்மையை இழந்து கடினமானதாக மாறிவிடும். நிலவியல் பகுதிகளில் காலணி அணியாமல் நடை பயிற்சி மேற்கொள்வது... பொருத்தமற்ற காலணிகளை அணிந்து நடப்பது... ஆகிய காரணங்களால் கால் ஆணி பாதிப்பு ஏற்படுகிறது. வேறு சிலர் சொக்ஸ் அணியாமல் ஷூவை மட்டும் அணிந்து நடை பயிற்சி மேற்கொண்டாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.‌

இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்கள் நாளாந்தம் இரவு நேரத்தில் உறங்கச் செல்வதற்கு முன் ஒரு வாயகன்ற கோப்பையில் தண்ணீரை ஊற்றி அதில் கால்களை கணுக்கால் வரை மூழ்க வைத்து, அதில் பிரத்யேக உப்பினை கலந்து, பாத குளியல் செய்தால்... இத்தகைய பாதிப்பிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும். அத்துடன் சந்தையில் கிடைக்கும் ஃப்யூமிஸ் ஸ்டோன் மற்றும் இமெரி போர்ட் ஆகியவற்றை பாவித்து பாதங்களை சுத்தம் செய்தும் பாதுகாக்கலாம். இத்தகைய தருணத்தில் தோலின் மேற்பகுதியில் பதிவாகி இருக்கும் இறந்த செல்கள் நீக்கமாகி, தோல் மென்மையடைகிறது.

காலணிகளை தெரிவு செய்து அணிந்து கொள்ளும் போதும் உரிய கவனம் செலுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்கள் தாங்கள் அணியும் காலணிகளை பாதம் -ஆரோக்கியம் -நீரிழிவு- ஆகிய மூன்றினையும் மனதில் வைத்து பிரத்யேகமாக காலணிகளை தெரிவு செய்து பாவிக்க வேண்டும். தொடர்ந்து புகை பிடிப்பவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் அவர்களும் இது தொடர்பான முழுமையான விழிப்புணர்வை பெற்றிருக்க வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.‌

இதற்குப் பின்னரும் கால் பகுதியில் கால் ஆணி பாதிப்பு தொடர்ந்தால்.... வைத்தியர்களை சந்தித்து, அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப வைத்தியர்கள் பிரத்யேக மற்றும் ஒருங்கிணைந்த சிகிச்சையை வழங்கி இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.

வைத்தியர் கௌரி தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஃபோகல் டிஸ்டோனியா எனும் நரம்பியல் இயக்க...

2026-07-17 16:09:06
news-image

பெம்பிகஸ் வல்காரிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2026-07-15 15:09:00
news-image

விரை வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-14 17:28:48
news-image

கோரொய்ட் பிளெக்ஸஸ் சிஸ்ட் எனும் சிசுவின்...

2026-07-13 17:19:36
news-image

மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை-...

2026-07-11 17:00:24
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11
news-image

ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண்...

2026-07-04 15:11:03
news-image

ஓலெக்ரானன் எலும்பு முறிவுக்கான நவீன சத்திர...

2026-07-03 17:26:41