எம்முடைய பெண்மணிகளின் சிலர் அதீத இடுப்பு வலியால் பாதிக்கப்படுவதுண்டு. சிலருக்கு இடுப்புடன் அடிவயிற்று பகுதியிலும் வலி உண்டாகும். இத்தகைய அறிகுறிகள் இருந்தால்.. அவர்களுக்கு மருத்துவ மொழியில் பெல்விக் இன்ஃப்ளமேட்ரி டிசீஸ் எனக் குறிப்பிடப்படும் இடுப்பு அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும்.
இவர்கள் தாமதம் செய்யாமல் அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டியதிருக்கும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
நாட்பட்ட இடுப்பு வலி, அடிவயிறு வலி, காய்ச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல்... போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால்.. உடனடியாக வைத்தியர்களை சந்திக்க வேண்டும். அவர்கள் குருதி பரிசோதனை- சிறுநீர் பரிசோதனை- கருப்பை திசு பரிசோதனை- அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை- போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள்.
இந்த பரிசோதனைகளின் முடிவில் உங்களுக்கு இனப்பெருக்க உறுப்புகளான கருப்பை- கருக்குழாய்- சினைப்பை - ஆகியவற்றில் ஏதேனும் பாக்டீரியா கிருமி தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பதையும், அதனுடைய தீவிரத்தையும் துல்லியமாக அவதானிப்பார்கள். குறிப்பாக இத்தகைய பாதிப்பு உடல் எடை அதிகம் உள்ள மற்றும் உடற் பருமன் கொண்ட பெண்மணிகளுக்கு அதிக அளவில் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம்.
இவர்களுக்கு வைத்தியர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களுடன் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளை வழங்கி நிவாரணம் அளிப்பர். சில தருணங்களில் அவர்களுக்கு ஒருங்கிணைந்த சத்திர சிகிச்சை மூலமாகவும் நிவாரணம் வழங்குவர்.
வைத்தியர் ஸ்ரீதேவி தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM