கிளிநொச்சி பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளதாக கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் எஸ்.துரைசிங்கம் தெரிவித்தார்.

குறித்த பொதுச்சபைக் கூட்டம் சங்கத்தின் தலைவர் க.மதனரூபன் தலைமையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள சங்கத்தின் பிரதான தலைமைக் காரியாலய மண்டபத்தில் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இப் பொதுச் சபை கூட்டமானது, மங்கள விளக்கேற்றல், அகவணக்கம், வரவேற்புரை ஆகியவற்றையடுத்து நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து தலைமையுரை, கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரின் உரை, சென்ற கூட்டறிக்கை வாசித்தல் ஆகியவற்றையடுத்து புதிய நிர்வாக சபை தெரிவு செய்வதற்கான நிகழ்வு நடைற்று அதனைத் தொடர்ந்து உப சபை உறுப்பினர்கள் நான்கு பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.