கின்னஸ் சாதனைக்காக பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்தியமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கின்னஸ் சாதனைக்காக உலகில் மிக நீளமான  முந்தாணையை மணப்பெண் அணிந்த திருமண வைபவம் ஒன்று  கண்டியில் இடம் பெற்றது.

 

இதில் குறித்த மணமகளின் 3.2 கிலோமீற்றர் நீளமான முந்தாணையை பாடசாலை மாணவிகள் ஏந்தியபடி நின்ற புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.

கண்டி, பேராதனை - கண்ணொருவ வீதியில் லொறி ஒன்றில் கொண்டுவரப்பட்ட 3.2 கிலோமீற்றர் நீளமான சேலையை விரிப்பதற்கு 250 பாடசாலை மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையிலேயே குறித்த கின்னஸ் சாதனைக்காக மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டமை சட்டத்திற்கு முரணானதுஎனத் தெரிவித்து, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் இந்தியாவைச் சேர்ந்த மணப் பெண் ஒருவர் 2.8 கிலோமீற்றர் நீளமான சேலை முந்தாணையை அணிந்திருந்தமையே சாதனையாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.