யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்ஸி பொராஸ்ட்டிற்கு நிதி குற்றவியல் புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தெஹிவளையில் 50 மில்லியன் ரூபா பெறுமதியான காணியுடனான வீடொன்றினை யோஷித ராஜபக்ஷ தனது பாட்டியின் பெயரில் வாங்கியுள்ளார்.

குறித்த காணியுடனான ஆடம்பர வீட்டை வாங்குவதற்கு 50 மில்லியன் ரூபா பணம் எங்கிருந்து கிடைத்தது? எவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்டது தொடர்பில் எப்.சி.ஐ.டி விசாரணைகளை நடாத்தி வருகின்றது.

குறித்த வழக்கு தொடர்பாக டெய்ஸியின் வாக்குமூலம் ஒன்று அவசியம் என கருதிய எப்.சி.ஐ.டி கொழும்பு பிரதான நீதிவானிடம் மனுவொன்றை சமர்ப்பித்தது. குறித்த மனுவை ஆராய்ந்த நீதிவான் இன்று மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.