உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் நிறைந்த வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான தீர்த்தம் எடுத்தல் உற்சவம் திங்கட்கிழமை (25) மாலை முல்லைத்தீவு தீத்தக்கரை பகுதியில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த திங்கட்கிழமை (18) பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகியிருந்தது.
அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை (25) உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் நிறைந்த வற்றாப்பளை கண்ணகை தாய்க்கான விளக்கு எரிப்பதற்கான உப்பு நீரினை கடலிலே பெற்றுக் கொள்கின்ற அரிய நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
அந்த வகையில் திங்கட்கிழமை (25) மாலை முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து தீர்த்தக்குடம் பாரம்பரிய முறைப்படி, பறை வாத்தியம் முழங்க அடியவர்கள் புடைசூழ பாரம்பரிய வீதிகள் வழியாகச் சென்று தீர்த்தக்கரையில் அமைந்திருக்கின்ற முல்லைத்தீவு பெருங்கடலில் தீர்த்தம் எடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தீர்த்தக்குடம் சென்ற வீதி வழியாகவே மீண்டும் முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தை இரவு 11.45 மணியளவில் வந்தடைந்தது.
வீதிகள் எங்கும் அடியவர்கள் கும்பங்கள் வைத்து மடைகள் பரவி சிதறு தேங்காய்கள் உடைத்து வழிபாடுகளை மேற்கொண்டனர்.
தீர்த்தக்குடம் முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தை வந்தடைந்ததன் பின்னர் உரிய முறைப்படி செவ்வாய்க்கிழமை (26) அதிகாலை வேளையிலே முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் உள்ள அம்மனுக்கு மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு கச்சை நேர்ந்து மடைபரவி உப்புநீரிலே விளக்கேற்றி தூழி பிடித்து விசேட பூசை இடம்பெற்று ஏடு படிக்கும் நிகழ்வும் ஆப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆப்பிக்கப்பட்ட காட்டு விநாயகர் ஆலய உற்சவம் தொடர்ச்சியாக இடம்பெற்று 31 ஆம் திகதி அன்றையதினம் முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்று மறுநாள் எதிர்வரும் திங்கட்கிழமை (01) அதிகாலையில் காட்டு விநாயகர் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM