2017 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி வீத­மா­னது 4.0 சத­வீ­த­மாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாக தொகை மதிப்பு மற்றும் புள்­ளி­வி­பரத் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. இலங்­கையின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 2017 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின் நிலை­யான (2010) விலையில் 2,211,612 மில்­லி­யன் ரூபாவாக அதி­க­ரித்­துள்­ளது. இது 2016 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2,125,848 மில்­லி­யன் ரூபாவாகும்.

இது தொடர்­பாக தொகை மதிப்­பீட்டு புள்­ளி­வி­ப­ரத்­தி­ணைக்­களம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை பின்­வ­ரு­மாறு,

2017 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் விவ­சாயம் 8.2 சத­வீதம், கைத்­தொழில், சேவைகள் மற்றும் உற்­பத்திப் பொருட்கள் மீதான மானி­யங்கள் கழிக்­கப்­பட்ட வரிகள் நடப்பு விலை­களில் மொத்த உள்­நாட்டு உற்­பத்­திக்கு முறையே 8.2 சத­வீதம், 25.9 சத­வீதம், 56.6 சத­வீதம் மற்றும் 9.4 சத­வீ­த­மாக பங்­க­ளிப்பு செய்­துள்­ளது. 2017ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுப் பொழுதில், கைத்­தொழில் மற்றும் சேவைகள் நட­வ­டிக்­கை­க­ளா­வன வளர்ச்சி வீதங்­க­ளாக 5.2 சத­வீத, 4.4 சத­வீ­த­மாக குறிப்­பி­டத்­தக்க வளர்ச்­சியை பதிவு செய்­துள்­ளன. எவ்­வா­றெ­னினும் மொத்த விவ­சாய நட­வ­டிக்­கைகள் மறை வளர்ச்­சி­யான 2.9 சத­வீத விளைவை பதிவு செய்­கின்­றது. பொரு­ளா­தாரத்தின் விவ­சாய துறை சாத­க­மல்­லாத கால­நிலை நிலை­மையால்(கடும் வரட்­சியும் அத்­தோடு பெரும் மழையும்) கடந்த 18 மாத காலப் பொழுதில் நாட்டின் சில மாவட்­டங்­களில் பெரும் தாக்­கத்தை எதிர்­கொண்­டதன் விளை­வாக, விவ­சாய துறை கடந்த 6 காலாண்­டு­க­ளாக மறை வளர்ச்சி வீதத்­தையே காட்­டு­கி­றது.

முந்­தைய வரு­டத்தின் அதே காலாண்­டுடன் ஒப்­பி­டும்­போது, விவ­சாய துறையின் உப பிரி­வு­க­ளுக்­கி­டையில், சேர்க்­கப்­பட்ட பெறு­ம­தி­யா­னது 'நெல் வளர்ச்சி' , 'எண்ணெய் சார்ந்த பழங்­களின் வளர்ச்சி (தேங்காய் உள்­ள­டங்­க­லாக'), 'தானி­யங்­களின் வளர்ச்சி (நெல் நீங்­க­லாக)', 'காய்­க­றி­களின் வளர்ச்சி', 'வாச­னைத்­தி­ர­வி­யங்­களின் வளர்ச்சி' என்­பன முறையே 32.9 சத­வீத, 20.2 சத­வீத, 15.3 சத­வீத, 5.9 சத­வீத மற்றும் 3.8 சத­வீ­தத்தால் இக் காலாண்டுப் பகு­தியில் குறைந்­துள்­ளது. எவ்­வா­றா­யினும் மேலும் கவ­னிக்­கத்­தக்­க­தாக 'இறப்பர் வளர்ச்சி', மற்றும் 'தேயிலை வளர்ச்சி' என்­பன கடந்த 3 வரு­டங்­களில் தொடர்ச்­சி­யான மறை வளர்ச்சி வீதங்­களை காலாண்­டு­களில் பதிவு செய்­துள்­ள­துடன், 2017ஆம் இரண்டாம் காலாண்டில் இவை முறையே 10.2 சத­வீத, 6.9 சத­வீத குறிப்­பி­டத்­தக்க நேர் வள ர்ச்சி வீதங்­களை பதிவு செய்­துள்­ளன. மேலும் 'விலங்கு உற்­பத்தி' மற்றும் 'நன்னீர் மீன்­பிடி' என்­பன முறையே 10.9 சத­வீத , 9.0 சத­வீத கணி­ச­மான நேர் வளர்ச்சி வீதங்­களை பதிவு செய்­துள்­ளன. விவ­சாய நட­வ­டிக்­கைகளான 'கடல் மீன்­பிடி' போன்றன 2017 ஆம் இரண்டாம் காலாண்டுப் பொழுதில் நேர் வளர்ச்சி வீதங்­களை (5.5 சத­வீதம், 3.1 சத­வீதம்) பதிவு செய்­தன.

இந்த காலாண்டில் கைத்­தொழில் துறை மொத்த உள்­நாட்டு உற்­பத்­திக்கு நடப்பு விலை­களில் 25.9 சத­வீத பங்­க­ளிப்பை செய்­த­துடன், கணி­ச­மான 5.2 சத­வீத வளர்ச்சி வீதத்தை ஒட்­டு­மொத்த கைத்­தொழில் நட­வ­டிக்­கையும் பதிவு செய்­கி­றது. கைத்­தொழில் துறையின் பிரி­வு­க­ளுக்­கி­டையில் 'கட்­ட­ட­வாக்கம்' கைத்­தொழில் துறைக்கு உயர் பங்­க­ளிப்­புடன், 2016 இரண்டாம் காலாண்­டுடன் ஒப்­பி­டு­கையில் இக் காலாண்டில் 9.3 சத­வீ­தத்தால் வளர்ச்­சி­யையும் காட்­டி­யுள்­ளது. கட்­ட­ட­வாக்கல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு சமாந்­த­ர­மாக ' சுரங்­க­ம் அ­கழ்தல் மற்றும் கல்­லு­டைத்தல் நட­வ­டிக்கை 18.4 சத­வீத குறிப்­பி­டத்­தக்க வளர்ச்சி வீதத்தை பதிவு செய்­கி­றது. 2017 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் முழு கைத்­தொழில் நட­வ­டிக்­கைகள் 0. 9 சத­வீ­தத்தால் வளர்ச்சி அடைந்­துள்­ளன. இக் காலாண்டில் 'உணவு, குடி­பா­னங்கள் மற்றும் புகை­யிலை உற்­பத்தி' மற்றும் 'புடவை மற்றும் ஆடை­ய­ணிகள் உற்­பத்தி' என்­பன முறையே 2.2 சத­வீத மறை வளர்ச்சி வீதத்­தையும், 2.5 சத­வீத நேர் வளர்ச்­சியை காணக்­கூ­டி­ய­தா­கவும், முழு கைத்­தொழில் நட­வ­டிக்­கை­களில் உயர் பங்­க­ளிப்பை கொண்­ட­ன­வா­கவும் உள்­ளன. மேலும் 'தள­பாட உற்­பத்தி' மற்றும் இறப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்­பத்தி முறையே 12.4 சத­வீத, 8.4 சத­வீத குறிப்­பி­டத்­தக்க நேர் வளர்ச்சி வீத ங்­களை பதிவு செய்­துள்­ளன.