அற­நெறி வகுப்­புக்கு சென்ற சிறு­மியை பாலியல் ரீதியில் துன்­பு­றுத்­தி­யதன் பேரில்  விகா­ர­ாதி­பதி ஒரு­வரை குறுந்துவத்த பொலிஸார் கைது செய்­துள்­ளனர். 

கைது செய்­யப்­பட்ட  சந்­தேக நபர் கம்­பளை மாவட்ட நீதிமன்ற நீதிவான் சாந்­தினி மீகொட முன்­னி­லையில் நேற்று ஆஜர்படுத்­தியபோது  எதிர்­வரும் 28 ஆம் திகதி வரை விளக்க மறி­யலில் வைக்குமாறு உத்­தர­விட்­டுள்ளார்.

குறுந்துவத்த பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட கொழு­வல பௌத்த விகா­ரையின் விகா­ரா­தி­பதி ஒரு­வரே சம்­ப­வ­தினம் சமய வகுப்­பிற்குச் சென்­றி­ருந்த பாட­சாலை மாண­வி­யான பாதிக்­கப்­பட்ட சிறு­மியை அங்­கி­ருந்த அரச மர­மொன்றின் பின்னால் மறை­வான இடத்துக்கு  ஏமாற்றி கூட்­டிச்­சென்று பாலியல் ரீதி­யாக துன்­பு­றுத்­தி­யுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. 

மேற்­படி சம்­பவம் குறித்து பாதிக்­க­ப­்பட்ட சிறுமி தனது பெற்­றோ­ருக்கு தெரி­ வித்­துள்ளார்.  இதை­ய­டுத்து பெற்றோர் குறுந்துவத்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி சந்­திக ஸ்ரீகாந்­தவின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­த­தை­ய­டுத்தே குறித்த பௌத்த பிக்கு கைது செய்­யப்­பட்டு கம்­பளை மாவட்ட நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து மேற்கண்ட உத்தர வினை நீதிவான் பிறப்பித்தார்.