நுவரெலியா - பம்பரகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா

27 May, 2026 | 10:41 AM
image

நுவரெலியா - பம்பரகலை தோட்டத்தில் வரம் அருளும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை (22)  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

தொடர்ந்து சனிக்கிழமை (23)  புண்ணிய வாசகம் கிரிகையுடன் பால்குட பவனி நடைபெற்று பிற்பகல் மகேஸ்வர பூஜையுடன் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் வேட்டை திருவிழாவும் நடைபெற்றது.

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை  (24)  பறவைகாவடி மற்றும் தீ மிதிப்பு நடைபெற்று மாலையில் திருக்கல்யாணமும் நடைபெற்றது.

(25) திங்கட்கிழமை சிறப்பு அபிஷேகம் இடம்பெற்று திருவிளக்கு பூஜை மற்றும் வசந்த மண்டப பூஜையுடன் தீப ஆராதனை இடம்பெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க தேவார பாராயணங்கள் ஒலிக்க மேள வாத்தியங்களுடன் உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்படட தேரில் விநாயகப் பெருமான், முருகப் பெருமான், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆகிய மூன்று தெய்வங்களின் வெளி வீதியூடாக தேரேறி வலம் வந்ததது குறித்த தேர் திருவிழாவில்  ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்று வருகிறது.

அதனை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (26)  பச்சை சாத்துதல் மாலை மாவிளக்கு பூஜையுடன் பூங்காவன பூஜை நடைபெறவுள்ளது. எதிர்வரும் புதன்கிழமை (27)  தீர்த்த உற்சவமும்  கரகம் வீதி உலா என்பன நடைபெற்று கொடி இரக்கத்துடன் விழா நிறைவுபெறும்.

தொடர்ந்து நுவரெலியா - பம்பரகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவழகைக் காண ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கலாநிதி அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையின்...

2026-06-11 19:01:53
news-image

மத்திய மாகாணத்தில் 14 பாடசாலைகளுக்கு புதிய...

2026-06-11 13:26:27
news-image

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக...

2026-06-11 12:28:50
news-image

"தகவலறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட...

2026-06-09 17:43:58
news-image

கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற...

2026-06-09 11:43:08
news-image

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் இருநாள் தென்னருவி...

2026-06-09 09:24:07
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் கல்விக் குடும்பத்தின் விசேட...

2026-06-09 08:37:12
news-image

எழுத்தாளர் சிவகௌரியின் ‘முத்துப்பரல்கள்’ ஹைக்கூ கவிதை...

2026-06-07 23:47:08
news-image

யாழ்ப்பாண இராசதானி சங்கிலியன் மன்னனின் சிரார்த்த...

2026-06-07 12:06:11
news-image

வாகரை கதிரவெளியில் பகலவன் கல்வி நிலையம்...

2026-06-05 21:03:05
news-image

நுவரெலியா சீதையம்மன் ஆலய திருக்கல்யாணம் வைபவத்தில்...

2026-06-03 19:04:59
news-image

இலங்கை கோபியோ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைக்கான...

2026-06-03 18:14:49