'பிளனட் எக்ஸ்' என்ற மர்­ம­மான கோள் நாளை 23 ஆம் திகதி சனிக்­கி­ழமை பூமியின் மீது மோத­வுள்­ள­தா­கவும் அதன் விளைவாக  மறுநாள் சூரிய  உத­யத்தை  பார்க்க நாம் எவரும் உயி­ருடன் இருக்க மாட்டோம் எனவும் தன்னைத் தானே தீர்க்­க­த­ரிசி  ஒரு­வ­ராக அறி­வித்துக் கொண்­டுள்ள  அமெ­ரிக்க விண்­வெளி ஆராய்ச்­சி­யா­ள­ரான  டேவிட் மியட்  உரிமை கோரி­யுள்ளார்.

அவரால் உரிமை கோரப்­பட்ட 'பிளனட் எக்ஸ்'  என்ற கோள் அமெ­ரிக்க விண்­வெளி ஆராய்ச்சி நிலை­ய­மான நாஸாவால் ஒரு­போதும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் டேவிட் மியட் வேதா­கம வச­னங்­களை அடிப்­ப­டை­யாக வைத்தே  நிபுறு கொள்கை எனும் சர்ச்­சைக்­கு­ரிய விதியின் அடிப்­ப­டையில் மேற்­படி எச்­ச­ரிக்­கையை விடுத்­துள்ளார்.

வேதா­க­மத்தில் திரு­வெ­ளிப்­பாடு நூலில் 12:1 வச­ன­மா­னது உலகம் அழி­வ­டை­வ­தற்கு அடை­யா­ள­மாக வானத்தில் மாபெரும் அடை­யாளம் தோன்றும் எனவும்  சூரி­யனை ஆடை­யாக அணிந்த ஒரு பெண் சந்­தி­ரனை தனது பாதத்தின் கீழ் வைத்­தி­ருந்து தனது  சிரசில் 12  நட்­சத்­தி­ரங்­களை  கிறீ­ட­மாக அணிந்­தி­ருப்பாள் எனவும்   கர்ப்­ப­வ­தி­யான அவள் பிர­சவ வேத­னையால் அல­றிய போது வானத்தில் வேறொரு அடை­யாளம் காணப்­பட்­டது எனவும் 7 தலை­க­ளையும்   அந்தத் தலை­களின் மீது கிரீ­டங்­க­ளையும் அணிந்து  காணப்­பட்ட பத்துக் கொம்­புகளையுடைய அந்த பெரிய சர்ப்பம்  வானத்தின் நட்­சத்­தி­ரங்­களில் மூன்றில் ஒரு பங்கை தனது வாலால் இழுத்து பூமியில் தள்­ளி­யது என வும்  கூறு­கி­றது.

இந்­நி­லையில் கடந்த மாதம் இடம்­பெற்ற சூரிய கிர­க­ணத்தின் போது இத்­த­கைய அடை­யா­ளங்கள் வானில் அவ­தா­னிக்­கப்பட்­ட­தாக உரிமை கோரும்  டேவிட் மியட், அத­ன­டிப்­ப­டையில் மேற்­கொண்ட கணிப்­பீட்டின் பிர­காரம் உலக அழிவு தினம் நாளை சனிக்­கி­ழ­மை­யா­க­வுள்­ள­தாக கூறு­கிறார். அவ­ரது உரிமை கோரலை உலக  விஞ்­ஞான சமூகம் அபத்­த­மான ஒன்­றெனக் கூறி நிரா­க­ரித்­துள்­ளது.

இது தொடர்பில் அமெ­ரிக்க  பாது­காப்பு அமைச்சின் முன்னாள் அதி­கா­ரி­யான நிக் போப் கூறு­கையில், டேவிட் மியட்டின் அஜாக்­கி­ர­தை­யான எச்­ச­ரிக்­கை­யா­னது உலகம் அழியப் போவ­தாக அநா­வ­சிய அச்­சத்தை மக்­க­ளி­டையே ஏற்­ப­டுத்தி அவர்கள் மத்தியில் தற்கொலைகளைத் தூண்டுவதாக  உள்ளது என குற்றஞ்சாட் டியுள்ளார்.

"நிபுறு என்ற விதி கிடையவே கிடை யாது. அதேபோன்று 23  ஆம் திகதி உலகம் அழிவடையாது" என்று அவர் மேலும் தெரி வித்தார்.