எம்மில் சிலருக்கு எதிர்பாராத தருணத்தில் விபத்தில் சிக்கும் போது அவர்களுடைய தலைப்பகுதியில் பாரிய பாதிப்பு ஏற்படும். வேறு சில தருணங்களில் இளையோர்களோ அல்லது முதிய வயதினரோ உயரமான பகுதியிலிருந்து எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழக்கூடும்.
இவர்களுக்கும் மூளையில் பாரிய பாதிப்பு ஏற்படக்கூடும். இத்தகைய தருணங்களில் அவர்களை உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டியதிருக்கும்.
இத்தகைய தருணங்களில் அவர்களுக்கு வைத்தியர்கள் பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொண்டு உடனடியாக நிவாரண சிகிச்சைகளை மேற்கொள்வார்கள்.
இவர்களில் சிலருக்கு மருத்துவ மொழியில் இன்ட்ராக்ரானியல் ஹெமடோமா எனக் குறிப்பிடப்படும் பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும். இதனை நவீன சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்க இயலும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
எம்முடைய மண்டையோட்டுக்குள் ரத்தம் உறைவது இன்ட்ராகிரானியல் ஹெமடோமா என குறிப்பிடப்படுகிறது. இத்தகைய குருதி எம்முடைய மூளை பகுதியில் உள்ள திசுக்களில் சேகரமாகி அல்லது மண்டை ஓடு பகுதிக்கு கீழ்ப்பகுதியில் சேகரமாகி மூளையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும்.
சிலருக்கு எதிர்பாராத வகையில் நிகழும் விபத்தின் காரணமாக மூளையில் உள்ள ரத்த நாளம் சேதமடைந்து, குருதி கசிவு ஏற்பட்டு இரத்த உறைவு உண்டாகிறது.
சிலருக்கு அடிபட்ட தருணத்தில் குறுகிய கால அவகாசத்திற்குள் மயக்கம் ஏற்படும். சிலருக்கு தலைவலி கடுமையாகவும், திடீர் திடீரென்றும் ஏற்படக்கூடும். குமட்டல், வாந்தி, தெளிவற்ற பேச்சு, கை, கால் வீக்கம் , பலவீனம், சோர்வு ,பக்கவாதம், பார்வை குறைபாடு ஆகிய அறிகுறிகளை இவை வெளிப்படுத்தும்.
இவர்களுக்கு சிடி ஸ்கேன்- எம்ஆர்ஐ ஸ்கேன் -ஓஞ்சியோகிராம் - ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து அதற்கு ஏற்ப நவீன சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வர்.
இத்தகைய சத்திர சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் இயல்பு நிலைக்கு மீள சிறிது கால அவகாசம் ஆகும். சில தருணங்களில் சிலர் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பாமல் போகக்கூடிய வாய்ப்பும் உண்டு.
இருப்பினும் வைத்தியர்களின் தொடர் கண்காணிப்பு மற்றும் அவர்களின் அறிவுரையை உறுதியாக பின்பற்றுவதன் மூலம் விரைவில் பாதிப்பிலிருந்து மீளலாம்.
வைத்தியர் : ஆத்ம ரஞ்சன்
தொகுப்பு:அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM