எம்மில் பலரும் கடின உழைப்பிற்குப் பிறகு பொருளாதார ரீதியில் சிறிதளவு தன்னிறைவு அடைந்த பிறகு மேலும் மேலும் முன்னேற வேண்டும் என்ற விருப்பத்தைக் கொண்டிருப்பார்கள்.
இவர்கள் கடின உழைப்புடன் நேர் நிலையான சிந்தனையையும், நேர் நிலையான ஆற்றலையும் தொடர்ந்து அதிகப்படுத்திக் கொள்வதன் மூலமாகவே முன்னேற்றத்தையும் வெற்றியையும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற யதார்த்த நிலையையும் உணர்ந்திருப்பார்கள்.
ஆனால் அதற்குரிய வழிமுறையை தான் அவர்களுக்கு எளிதாக புலப்படுவதில்லை. இத்தகைய தருணங்களில் முன்னேற்றத்திற்கு உதவும் பிரத்யேக வழிபாட்டை எம்முடைய முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : வலம்புரி சங்கு, சங்கு, அட்சதை, வாயகன்ற கிண்ணம்
கடந்த தசாப்தங்களில் எம்முடைய முன்னோர்கள் சொந்தமாக காணி வாங்கி, வீடு கட்டும் போது வாசலில் இடது புறமாகவோ அல்லது வலது புறமாகவோ கால் படாத இடத்தில் சங்கு ஒன்றினை பிரதிஷ்டை செய்திருப்பதை நாம் கண்டிருப்போம்.
ஆனால் தற்போதைய சூழலில் அடுக்குமாடி குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொண்டு வாழ தொடங்கி உள்ளோம். இதனால் வீட்டின் அமைப்புகளில் கடந்த கால சுப சகுனத்தை உண்டாக்கும் ஆன்மீக பொருட்களை பாவிப்பது குறைந்துவிட்டது அல்லது அருகிவிட்டது அல்லது காணாமல் போய்விட்டது என்றே குறிப்பிடலாம்.
சங்கு என்பது நேர் நிலையான அதிர்வலைகளை கிரகித்து அதனை பன்மடங்கு பெருக்கி இந்த பிரபஞ்சத்தில் கலந்திடும் ஆற்றல் பெற்றவை. இதன் காரணமாகவே எம்முடைய ஆலயங்களில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் போது மந்திரங்களை ஓதிக்கொண்டே சங்கின் மூலமாக அபிஷேகங்கள் செய்கிறார்கள்.
இதன் பொருள் என்னவெனில்... இந்த சங்கு கருவறைக்குள் உச்சரிக்கப்படும் மந்திரத்தை கிரகித்து, அதன் ஆற்றலை அங்கு முழுவதுமாக பரவ செய்கிறது. அத்துடன் கருவறைக்குள் எந்த எதிர்மறை ஆற்றலையும் அனுமதிப்பதில்லை.
இதன் காரணமாகவே எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் இத்தகைய ஆற்றல் வாய்ந்த சங்கை எம்முடைய இல்லங்களிலும்... வணிக நிலையங்களிலும்...பாவித்தால் முன்னேற்றம் சாத்தியம் என்றனர்.
வீட்டின் பூஜையறையில் வலம்புரி சங்கு அல்லது இடம்புரி சங்கு ஏதேனும் ஒரு சங்கை வாங்கி, அதனை அப்படியே வைக்காமல் அதனுடைய புனிதத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் வாய் அகன்ற கிண்ணம் ஒன்றில் அட்சதையை நிரப்பி அதன் மீது இந்த வலம்புரி சங்கினை வைத்து வழிபட வேண்டும்.
உங்களது பூஜை அறையில் நீங்கள் மந்திரங்களை உச்சரிப்பதும் சவால்களை எதிர்கொள்வதற்கான துணிச்சல்களையும் நேர் நிலையான அணுகுமுறைகளை பற்றியும் பிரார்த்தனை செய்தால்... அதனை சங்கு உட்கிரகித்துக் கொண்டு இந்த பிரபஞ்சத்தில் எதிரொலித்து உங்களது வெற்றியை சாத்தியப்படுத்தும். அத்தகைய ஆற்றல் வாய்ந்த சங்கு வழிபாட்டை நீங்கள் ஒரு பவுர்ணமி நாளில் தொடங்கினால் வெற்றி உறுதி.
தொகுப்பு : சுபயோக தாசன்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM