மாகா­ண­சபை தேர்தல் திருத்த சட்­ட­மூ­லத்தை மூன்றில் இர­ண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றிக்­கொள்ளும்  விட­யத்தில் இழு­பறி நிலை ஏற்­பட்­ட­தை­ய­டுத்து அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும்  சிறு­பான்மை கட்­சி­களின் தலை­வர்­க­ளுடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து தொலை­பே­சியில் உரை­யா­டி­யுள்ளார். 

இந்த சட்­ட­மூ­லத்தில் சிறு­பான்­மை­யின மக்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை பாதிக்­கா­த­வ­கை­யி­லான  திருத்­தங்­களை மேற்­கொள்­ள­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர்  ரவூப்  ஹக்கீம், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர் மனோ கணேசன், அகில இலங்கை  மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் ஆகியோர் வலி­யு­றுத்தி வந்­தனர்.  

திருத்­தங்­களை மேற்­கொள்­வது தொடர்பில் நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இந்த மூன்று கட்­சி­களின் தலை­வர்­களும் பல தடவைகள் பேச்­சு­வார்த்தை நடத்­தினர். இந்த இழு­பறி நிலை­யின்­போதே இந்த மூன்று கட்­சி­களின் தலை­வர்­க­ளு­டனும் தொலை­பே­சியில் தனித்­த­னி­யாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உரை­யா­டி­யுள்ளார்.   இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு  ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் மூன்று தலைவர்களையும் கோரியதாக  தெரியவருகின்றது.