மியன்மார் நாட்டில் ஏற்­பட்­டுள்ள அமை­தி­யற்ற சூழலை அடுத்து தேவை ஏற்­படும் பட்­சத்தில் ரோஹிங்யா அக­திகள் விட­யத்தில் கரி­ச­னை­யின்றி செயற்­ப­டாமல் அவர்­க­ளுக்கு இலங்கை அர­சாங்கம் மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் ஒத்­து­ழைப்­பு­க­ளையும் உத­வி­க­ளையும் வழங்கும் என வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன சபையில் தெரி­வித்தார்.

பெளத்த நாடு என்ற அடிப்­ப­டையில் நாம் கவலை கொள்­கின்றோம்.மியன்­மாரில் சமா­தா­னம் சட்டம் ஒழுங்கை பாது­காக்­கு­மாறு நாம் மியன்மார் அர­சிடம் கோரு­கின்றோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கிழமை மியன்மார் ரோஹிங்யா முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் அநீதி தொடர் பில் அவ­தானம் செலுத்­து­மாறு வலி­யு­றுத்தி நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்­பாக சல்மான் எம்.பி. கொண்டு வந்த சபை ஒத்­தி­வைப்பு வேளை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் மேலும் உரை­யாற்­று­கை யில்,

மியன்மார் நாட்டில் ஏற்­பட்ட அமை­தி­யற்ற சூழல் கார­ண­மாக பல இலட்சக்கணக்­கான மக்கள் அக­தி­க­ளாக பல நாடு­க­ளுக்கு தஞ்சம் புகுந்­துள்­ளனர். இவ்­வாறு  தஞ்சம் புகுந்­துள்ள அக­திகள் சுகா­தாரம் உள்­ளிட்ட முக்­கிய அடிப்­படை வச­திகள் இல்­லாமல் உள்­ளனர்.

இது தொடர்பில் நாம் பூரண அவ­தானம் செலுத்­தி­யுள்ளோம். இலங்­கைக்கும் மியன்­மா­ருக்கும் பெளத்த நாடு என்ற வகையில் நீண்­ட­கால நட்­பு­றவு உள்­ளது. பெளத்த சாசன அடிப்­ப­டை­யி­லான நட­வ­டிக்­கைகள் குறித்து இரு நாடு­களும்  புரிந்­து­ணர்வு அடிப்­ப­டையில் செயற்­பட்டு வரு­கின்றோம். 

எனவே தற்­போது பாதிக்­கப்­பட்ட அக­திகள் தொடர்பில் நாம் அவ­தானம் செலுத்­தி­யுள்ளோம். இதன்­படி 1951 பிர­க­ட­னத்தின் பிர­காரம் அக­திகள் விட­யத்தில் நாம் அக்­கறை செலுத்­த­வுள்ளோம். மியன்மார் விவ­காரம் தொடர்பில் சர்­வ­தேச அளவில் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

எனவே இந்த நிலைமை பெளத்த நாடு என்ற அடிப்­ப­டையில் நாம் கவலை கொள்­கின்றோம். மியன்மார் நாட்டில் இடம்­பெற்ற அமை­தி­யற்ற சூழல் கார­ண­மாக அக­தி­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. இதன்­படி தேவை ஏற்­படும் பட்­சத்தில் நாம் கரி­ச­னை­யின்றி செயற்­ப­டாது ரோஹிங்யா அகதிகளுக்கு இலங்கை அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் ஒத்துழைப்புகளை வழங்கும்.

எனவே மியன்மாரில் சமாதானம் சட்டம் ஒழுங்கை பாதுகாக்குமாறு நாம் மியன்மார் அரசிடம் கோருகின்றோம் என்றார்.