சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வு மாணவர்களுக்கான மாதிரி நீதிமன்ற மற்றும் குற்றப் புலனாய்வுப் பயிலரங்கு

25 May, 2026 | 12:21 PM
image

(நமது நிருபர்)

பிரமுகா சட்டக் கல்லூரியால் ஏற்பாடு செய்யப்பட்ட "மாதிரி நீதிமன்றம் மற்றும் குற்றவியல் காட்சி: புலனாய்வுப் பயிலரங்கு" அண்மையில் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புதிய கலைத்துறையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர். டி சில்வா மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் சட்டத்தரணியுமான அஜித் ரோஹண ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

நடைபெறவுள்ள சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் மற்றும் பிரமுகா சட்டப் பள்ளியின் ஆசிரியர்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.

இதன்போது, மேல் நீதிமன்ற வழக்கொன்றை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தும், பொலிஸாரின் குற்ற இடப் புலனாய்வு அதிகாரிகள் ஒரு குற்றவியல் காட்சியை எவ்வாறு அறிவியல் பூர்வமாகப் புலனாய்வு செய்கிறார்கள் என்பது குறித்தும் மாணவர்களுக்கு நடைமுறை வழிகாட்டல்களுடன் கூடிய நேரடி அனுபவம் வழங்கப்பட்டது.

நிகழ்வின் ஆரம்ப உரையை நிகழ்த்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, குற்றப் புலனாய்வுகள் தொடர்பான சட்ட விதிகளையும், அதில் பொலிஸ் அதிகாரிகளின் பங்களிப்பு மற்றும் பொறுப்புகள் குறித்தும் விரிவாக விளக்கினார்.

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான யு.ஆர். டி சில்வா, குற்றவியல் வழக்குகளுக்கு சட்டத்தரணிகள் தங்களை எவ்வாறு தயார்படுத்த வேண்டும் என்பது குறித்தும், நீதிமன்ற வாதங்களின் போது பின்பற்ற வேண்டிய முக்கிய நடைமுறைகள் குறித்தும் மாணவர்களுக்குப் பயனுள்ள வழிகாட்டல்களை வழங்கினார்.

சட்டக் துறைக்குள் நுழையவுள்ள மாணவர்களுக்கு, குற்றப் புலனாய்வு மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பு குறித்து நேரடித் தெளிவை ஊட்டும் நோக்கில் இப்பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கலாநிதி அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையின்...

2026-06-11 19:01:53
news-image

மத்திய மாகாணத்தில் 14 பாடசாலைகளுக்கு புதிய...

2026-06-11 13:26:27
news-image

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக...

2026-06-11 12:28:50
news-image

"தகவலறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட...

2026-06-09 17:43:58
news-image

கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற...

2026-06-09 11:43:08
news-image

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் இருநாள் தென்னருவி...

2026-06-09 09:24:07
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் கல்விக் குடும்பத்தின் விசேட...

2026-06-09 08:37:12
news-image

எழுத்தாளர் சிவகௌரியின் ‘முத்துப்பரல்கள்’ ஹைக்கூ கவிதை...

2026-06-07 23:47:08
news-image

யாழ்ப்பாண இராசதானி சங்கிலியன் மன்னனின் சிரார்த்த...

2026-06-07 12:06:11
news-image

வாகரை கதிரவெளியில் பகலவன் கல்வி நிலையம்...

2026-06-05 21:03:05
news-image

நுவரெலியா சீதையம்மன் ஆலய திருக்கல்யாணம் வைபவத்தில்...

2026-06-03 19:04:59
news-image

இலங்கை கோபியோ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைக்கான...

2026-06-03 18:14:49