சட்டமா அதிபரை பதவியிலிருந்து நீக்குமாறு கோரி  பிரேரணையொன்றினை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க கூட்டு எதிர்க் கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.

இலங்கை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யும் சட்டத்தின் கீழ் பாராளுமன்றத்தில் பதவி நீக்க பிரேரணையை  நிறைவேற்றுவதன் மூலம் சட்ட மா அதிபரை நீக்குவதற்கான அதிகாரம் பாராளுமன்றத்துக்குள்ளது என  கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில தெரிவித்தார்.