கொட்டாஞ்சேனை அளுத்மாவத்தை வீதி நாளை 22 ஆம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

நாளை 22 ஆம் திகதி இரவு 9 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 5 மணி வரை குறித்த வீதி மூடப்பட்டிருக்கும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதனால் வாகன சாரதிகளி் மற்றும் குறித்த வீதியை பயன்படுத்துவோர் மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 குறித்த வீதியின் கீழாகச் செல்லும் குடிநீர்க்குழாயில் திருத்தப் பணிகள் மேற்கொள்ள இருப்பதன் காரணத்தினாலேயே அளுத்மாவத்தை வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.