இளமையில் கல்வியானது, ஒரு மனிதனுக்கு மிகவும் இன்றியமையாததொன்றாகும். குழந்தை பருவத்தில் கற்கும் கல்வியானது, சமுதாயத்தில் பரிணாமம் அடைந்து அவனை சமுதாயத்தில் ஓர் முழுமையான மனிதனாக உருமாற்றுகின்றது.

எப்போதுமே நலச்செழுமையான சந்ததியினை உருவாக்குவதில் முன்னின்று செயற்படும் அங்கர்ரூபவ் தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக தன்னிகரற்ற ஓர் செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

“இலட்சிய பயணம்” என்ற தொனிப்பொருளின் கீழ் செயற்படும் இந்த செயற்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு கற்றல் தொடர்பான நுட்பங்களையும் தமது கல்வியை மேம்படுத்திக்கொள்ளக்கூடிய அரிய வாய்ப்புக்களையும் பெற்றுத்தருகின்றது.

எதிர்கால மாணவ சந்ததியின் கனவுகளை நனவாக்கி, அவர்களது இலட்சியங்களை அடைவதற்கான வழிகாட்டலை வழங்கும், அங்கரின் இந்த உன்னத செயற்திட்டம் வடக்கில் 3 மாதங்களுக்கும் கிழக்கில் 3 மாதங்களுக்கும் என மொத்தமாக 6 மாதங்களுக்கு நடைபெறவுள்ளது.

வெறும் கருத்தரங்குகள் மற்றும் சொற்பொழிவுகள் மட்டுமல்லாது, கற்றலை சுவாரஸ்யமாக்குவதற்காகவும் கற்றல் குறித்த ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் பல விநோத நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன, உதாரணமான துரித வாசிப்பு, எண் சட்டங்கள், நினைவு வரைவுகள் போன்ற சுவாரஸ்யமான செயற்பாடுகள் நடைபெறவுள்ளன. “இலட்சிய பயணத்தின் முதற்கட்ட செயற்திட்ட நிகழ்வுகள் செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி யாழ். மத்திய கல்லூரியில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

உள்ளத்தில் எதிர்கால இலட்சியத்தை அடைய வேண்டும் என்ற உறுதியோடும் ஆர்வத்தோடும் வரும் அனைவரையும் அங்கர் அன்போடு மட்டுமல்லாமல் இலவசமாகவும் வரவேற்கின்றது. வாருங்கள் உங்கள் இலட்சிய பயணத்தின் முதல் அடியை எம்மோடு எடுத்து வையுங்கள். உங்கள் பயணத்தின் வழிதுணையாய் எப்போதும் நாம் உங்களோடு இருப்போம்.