எம்முடைய வாழ்வில் கிடைக்கும் வெற்றிகளின் பின்னணியில் வண்ணங்களுக்கும் கணிசமான பங்களிப்பு உண்டு என்பதை நாம் என்றாவது நினைத்துப் பார்த்ததுண்டா..? அப்படி நினைத்துப் பார்த்தால்... உங்களுடைய மகிழ்ச்சிக்கு அல்லது வெற்றி செய்தி கிடைத்த தருணத்தில்..
நாம் அணிந்திருக்கும் ஆடையின் வண்ணம் நமக்கு சாதகமானதாக இருந்திருக்கும். ஒரு சிலர் நாம் முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும் என எண்ணும் தருணத்தில் அவர்களையும் அறியாமல் பிரத்யேக வண்ணத்திலான ஆடையை தொடர்ந்து பாவித்திருப்பதை நாம் அனுபவத்தில் கண்டிருப்போம்.
இதனால் வெற்றிகளுக்கு வண்ணங்களும் உதவி செய்கிறது என்பதை நாம் துல்லியமாக அவதானிக்க இயலுகிறது. இந்தத் தருணத்தில் எம்முடைய முன்னோர்கள் மேஷ ராசியிலிருந்து மீன ராசி வரை இல்லை உள்ளவர்கள் பாவிக்க வேண்டிய பிரத்யேக வண்ணங்கள் குறித்து ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளனர். இந்த ராசியினர் இந்த வண்ணத்திலான ஆடையை உடையாக அணிந்தால்.. அவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். ஆடை தான் அணிய வேண்டும் என்பதல்ல .. அந்த வண்ணத்திலான கைகுட்டை- அந்த வண்ணத்திலான செல்போன்களின் உறை ஆகியவற்றையும் நாம் பாவிக்கலாம்.
மேசம் - ஒரஞ்சு வண்ணம்
ரிஷபம் - பச்சை வண்ணம்
மிதுனம் - பிங்க் வண்ணம்
கடகம் - சிவப்பு வண்ணம்
சிம்மம் - மஞ்சள் வண்ணம்
கன்னி - மென்மையான ஊதா ( லைட் ப்ளூ) வண்ணம்
துலாம் - கருப்பு வண்ணம்
விருச்சிகம் - மஞ்சள் வண்ணம்
தனுசு - சிவப்பு வண்ணம்
மகரம் - பிங்க் வண்ணம்
கும்பம் - பச்சை வண்ணம்
மீனம் - வெண்மை வண்ணம்
உடனே எம்மில் சிலர் எம்முடைய சோதிடர் நீங்கள் குறிப்பிட்ட வண்ணத்தை பாவிக்க வேண்டாம் என பரிந்துரை செய்திருக்கிறார் என்பர். அதற்கும் சில காரணங்கள் உங்களுடைய ஜாதகத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும். அதனால் நீங்கள் அதனையே பின்பற்றுங்கள்.
இந்தத் தருணத்தில் நவகிரகங்கள் உங்களுக்கு கெடுபலனை தருகிறது என்றாலோ அல்லது சுப பலன்களை வழங்கவில்லை என்றாலோ அந்த கிரகத்திற்குரிய வண்ணங்களை பாவிக்கும் போது சோதிடர்களின் அறிவுரையை கேட்க வேண்டும். இருப்பினும் நவகிரகங்களுக்கு எந்த வண்ணங்கள் பொருத்தமானவை என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
சூரியன் - ஓரஞ்சு வண்ணம்
சந்திரன் - வெண்மை வண்ணம்
செவ்வாய் - சிவப்பு வண்ணம்
புதன்- பச்சை வண்ணம்
குரு - மஞ்சள் வண்ணம்
சுக்கிரன் - பிங்க் வண்ணம் - வெண் பட்டு துணி
சனி - ஆகாய ஊதா வண்ணம்
ராகு - கருப்பு வண்ணம்
கேது- பல வண்ணம் கொண்ட சதுர வடிவிலான துணி
எம்மில் சிலர் இதெல்லாம் பின்பற்றுவது கடினம் என்பர் . அதிலும் குறிப்பாக இல்லத்தரசிகள் இந்த விடயத்தில் எல்லாம் கவனம் செலுத்துவது கடினம் என சொல்வர். இதனால் தான் எம்முடைய முன்னோர்கள் பொதுவான விடயம் ஒன்றை சூட்சமமாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
நவதானியங்களை சிறிதளவு எடுத்துக்கொண்டு அவற்றை சதுர வடிவிலான வெண்மை வண்ண துணியில் கட்டி முடிச்சிட்டு, அதனை எம்முடைய தலையணையின் அடிப்பகுதியில் வைத்து உறங்கிட வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வரும் போது.. நவகிரகங்களின் ஆற்றல்கள் சம சீரற்ற நிலையில் இருந்தால்.. அவற்றை இந்த நவதானியங்கள் சீர்படுத்தி சமச்சீரான ஆற்றலை வழங்கி, எம்முடைய முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும்.
தொகுப்பு: சுபயோக தாசன்
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM