‘பேஸ்புக்’ஐப் பயன்படுத்தி பலரை ஏமாற்றிப் பணம் பறித்த அறுபத்து நான்கு வயதுப் பாட்டியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனது பேஸ்புக் கணக்கில் உள்ள நண்பர்களிடம், தனக்கு வெளிநாட்டில் இருந்து அன்பளிப்பு ஒன்று கிடைத்திருப்பதாகவும், அதைப் பெற்றுக்கொள்வதற்குப் பணம் தேவைப்படுவதாகவும் கூறிய இவர், வங்கிக் கணக்கிலக்கம் ஒன்றைக் குறிப்பிட்டு அதில் பணம் செலுத்தி உதவுமாறு கேட்டிருக்கிறார்.

அதை நம்பி பலரும் குறித்த கணக்கில் பணத்தைச் செலுத்தியுள்ளனர்.

இது குறித்துக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் ஹோமாகமைவாசியான அந்தப் பெண்ணைக் கைது செய்தனர்.