கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கண்ணகிநகா் மேற்கு பிரதேச  மக்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து கரைச்சி பிரதேச செயலாளருக்கும், மாவட்ட அரச அதிபருக்கும் நேரில் சென்று மக்கள் மகஜரொன்றைக்  கையளித்துள்ளனா்.

இன்று  காலை பத்து மணிக்கு  கண்ணகிநகா் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த மக்களின் பிரதிநிதிகள் சிலா் பிரதேச செயலகம் மற்றும்  மாவட்டச் செயலகத்திற்கு சென்று கோரிக்கை மகஜரை கையளித்துள்ளனா்.

கடந்த சில மாதங்களாக கிளிநொச்சியில் நிலவிய கடும்  வறட்சியின் போது தங்களது கிராமமும்  பாதிப்புக்குள்ளாகியிருந்து. 

ஆனால் மாவட்டத்தின் ஏனைய கிராமங்களுக்கு வழங்கப்பட்டது  போன்று எங்களது கிராமத்துக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை. 

இங்கு 85 வரையான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனா். மீள்குடியேற்றத்தின் ஆரம்ப காலத்தில்  வழங்கப்பட்ட உதவித் திட்டங்களைத் தவிர வேறு எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. உட்கட்டுமான வசதிகள் மிக மோசமாக இருக்கிறது எனவும் தெரிவித்து குறித்த மகஜரை கையளித்துள்ளனர்.