அம்பாறை ஒலுவில் கடலில்  மீன்பிடிக்கச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் இன்று வியாழக்கிழமை காலையில் இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இதன் போது ஒலுவில் 4 ஆம் பிரிவைச் சேர்ந்த 44 வயதுடைய சம்சுதீன் பஸீல் என்ற மீனவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மீனவரின் சடலம், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.