மட்டக்களப்பில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பிலான தத்ரூபமான முன்னோட்ட நிகழ்வு ஒன்று நேற்று களுதாவளை மகா வித்தியாலயத்திற்கு முன்னால் கல்முனை, மட்டக்களப்பு பிரதான வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விபத்து ஒன்று ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது எவ்வாறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வது வைத்தியசாலை அவர்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல விடயங்கள் ஒத்திகை பார்க்கப்பட்டன.

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் தலைமையில் இடம்பெற்ற  இந் நிகழ்வில் வைத்தியசாலையின் அனர்த்த பாதுகாப்பு பிரிவினர், பொதுமக்கள், போக்குவரத்துப் பொலிஸார், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின்  வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலரின் பங்களிப்பு பாராட்டத்தக்கது.

குறித்த முன்னோட்ட நிகழ்வானது பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.