மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் இன்று காலை 8 மணி முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த டிக்கோயா, வட்டவலை, கொட்டகலை, லிந்துலை, நானுஓயா ஆகிய இடங்களைச் சேர்ந்த வைத்தியர்கள் 48 மணிநேர பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பணிபகிஷ்கரிப்பினால் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் சிகிச்சைகளின்றி வீடு திரும்புகின்றனர்.