வடக்கு கல்வி அதிகாரிகளின் சட்டவிரோத செயல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்ட வேண்டும் - கஜேந்திரகுமார்

21 May, 2026 | 07:01 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

வட மாகாண கல்வி அதிகாரிகள், வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வட மாகாண ஆளுநர் உள்ளிட்டோரின் சட்டவிரோத செயற்பாடுகளால் ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாது அவர்களை தங்கி வாழ்வோருக்கும் ஏற்படும்  எதிர்காலத்தில்   ஏற்படப்போகும் மிக மோசமான அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பில்  தலையீடு செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்ற அமர்வின்போது  நடைபெற்ற  இறக்குமதி மற்றும் ஏற்றுமதி  (கட்டுப்பாட்டுச் ) சட்டத்தின்  ஒழுங்குவிதிகள்   மீதான   விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

வடமாகாணத்தில் சேவையின் தேவை கருதி இடம்மாற்றம் என்ற பெயரில் கல்வியை மோசமாகப் பாதிக்கும் வகையில் செயற்பாடுகள் அமைந்துள்ளன.ஆசிரியர் தொழிற் சங்கங்களுடனான கலந்துரையாடலோ, அச்சங்கங்களின் பங்களிப்புகளோ இன்றி, பெருந்தொகை ஆசிரியர்களுக்கு வடமாகாண கல்வி அதிகாரிகளால் 'சேவையின் தேவை கருதிய இடமாற்றம் என்ற அடிப்படையில் 193 ஆசிரியர்களுக்கு ஜனநாயக விரோதமானதும், சர்வாதிகாரமான முறையிலும் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 தாபன விதிக்கோவையின்  பிரகாரம் 'இடமாற்றத்தக்க 25 அல்லது அதனிலும் கூடிய தொகையினரைக் கொண்ட பணியாளர்கள் உள்ள ஒவ்வொரு திணைக்களத்திலும் இடமாற்றச்சபை ஒன்றோ அதற்கு மேற்பட்டனவோ நிறுவப்படவேண்டும்' என்று 2013.07.03ம் திகதி வெளியிடப்பட்ட  வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்ட வடக்கு மாகாண அரச சேவைக்கான தாபன நடைமுறை ஒழுங்கு விதிக்கோவையின் 188 வது பிரிவில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  2022.12.14 ம் திகதி வெளியிடப்பட்ட,  அதிவிசேட வர்த்தமானியின் பிரகாரம், 'அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் சேவையின் அவசர தேவைகளின் பெயரில் இடமாற்றம் செய்யப்படும் முன்னர் தத்துவங்கள் கையளிக்கப்பெற்ற அதிகாரி அல்லது நியமிப்பு செய்யும் அதிகாரி அத்தகைய தேவையொன்று பிரிவு 258 இல் குறிப்பிட்டுள்ளதற்கிணங்க, உண்மையிலேயே எழுந்துள்ளது எனவும்இ அந்த இடமாற்றம் அடுத்த வருடாந்த இடமாற்றங்கள் செய்யப்படும் வரையில் பிற்போடமுடியாதெனவும் தனிப்பட்ட முறையில் திருப்தியுறுதல் வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளது.

'வருடாந்தம் செய்யப்படும் இடமாற்றங்களை' இடமாற்றச் சபையூடாக மேற்கொள்ளாது, 'சேவையின் தேவை கருதிய இடமாற்றம்' என்ற அடிப்படையில் தன்னிச்சையாகவும் - ஜனநாயக விரோதமாகவும் சர்வாதிகாரமாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை, அதிகார துஸ்பியோகம் நிறைந்ததும் சட்டவிரோதமானதுமான பழிவாங்கும் செயற்பாடாகும்.

இதனால், குறித்த சட்ட விரோதமான நிர்வாக மீறல்களுக்கு  எதிராக, யாழ் மாவட்ட உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை ஆசிரியர்கள் நாடியிருந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு வடமாகாண ஆளுநரால் 25 ற்கும் மேற்பட்ட இடமாற்றங்கள் இடமாற்ற சபையின் தீர்மானத்தை மீறி தன்னிச்சையாக நிறுத்தப்பட்டிருந்தன.

ஏற்கனவே வெளிமாவட்ட சேவைக்கு ஒத்த தீவகம் வடமாராட்சி கிழக்கு போன்ற பகுதிகளில் பணியாற்றியோருக்கு இடமாற்றச் சபை கூட்டப்படாமல் சட்டவிரோதமான 2026 இல் தன்னிச்சையாக இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்ட பல ஆசிரியர்களை குறித்த பாடசாலைகளிலிருந்து வடமாகாண கல்வி அதிகாரிகள் இன்னும் விடுவிக்கவில்லை.

சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்  மேன்முறையீடுகளின் பரிசீலனையும் அரசியல்தலையீடுஇ பாரபட்சங்கள், பழிவாங்கல் எண்ணம் பொதுச்சேவை ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்ட பல ஆசிரியர்களின் அடிப்படை கொண்ட வகையிலேயே வடமாகாண உரிமைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு, ஆசிரியர்களினதும், அவர்களை தங்கிவாழ்வோரதும் வாழும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது.

ஆங்கில மொழி மூல பாடங்களை கற்பிக்கும் சேவையின் தேவை இடமாற்றம் வழங்கப்பட்ட மாவட்ட பாடசாலைகளுக்கு தேவையற்றுள்ள நிலையில், தற்போதைய நிலையங்களில் ஆங்கில மொழி மூலம் கற்பித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை சேவையின் தேவை இடமாற்றம் என்ற போர்வையில் பழிவாங்கியுள்ளமை. (இதன் மூலம் குறித்த ஆசிரியர்களிடம் கற்கும் மாணவர்களின் உரிமையும் பாதிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண கல்வி அதிகாரிகள், வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடமாகாண ஆளுநர் உள்ளிட்டோரின் சட்டவிரோத செயற்பாடுகளால் ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாது அவர்களை தங்கி வாழ்வோருக்கும் ஏற்படுத்தப்பட்டுவரும் / ஏற்படப்போகும் மிக மோசமான அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பில் மிக அவசரமாக தலையீடு செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாரிய கடத்தல் முறியடிப்பு: சொகுசு மோட்டார்...

2026-06-14 14:54:12
news-image

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியப்...

2026-06-14 14:53:38
news-image

மாகாணசபைத் தேர்தல்; சாணக்கியன் எம்.பியின் தனிநபர்...

2026-06-14 14:48:35
news-image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை...

2026-06-14 14:07:30
news-image

டெங்கு உட்பட வைரஸ் காய்ச்சல் பரவல்...

2026-06-14 14:31:24
news-image

தேசிய கல்விக் கொள்கையின்றி கல்வி மறுசீரமைப்புகளை...

2026-06-14 13:48:36
news-image

எனது கணவர் செம்மணி படுகொலையை வெளிப்படுத்திய...

2026-06-14 12:49:37
news-image

சிறுபான்மை கட்சிகள் கூட்டிணைந்து ஜனாதிபதி அநுரவை...

2026-06-14 12:48:47
news-image

சலே எட்டு நாட்களாக ஒரு துளி...

2026-06-14 12:48:14
news-image

கண்டி - குருநாகல் வீதியில் விபத்து:...

2026-06-14 12:47:40
news-image

2.5 மில்லியன் டொலர் மோசடி பாராளுமன்றுக்கு...

2026-06-14 13:56:41
news-image

தமிழ்ச்சமூகத்தின் மாபெரும் ஆளுமை கலாநிதி தேவநேசன்...

2026-06-14 12:34:42